சிறார் விரும்பும் சிங்கப்பூர்

சிறார் விரும்பும் சிங்கப்பூர்

3 mins read
188e4d54-b187-434a-9116-2b95a226c00d
சிங்கப்பூர் விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய தின இரண்டாம் முன்னோட்ட நிகழ்ச்சி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 
Google News Preferred Icon

சிங்கப்பூர் தனது சுதந்திரப் பயணத்தில் ஒரு புதிய பத்தாண்டில் வெற்றிகரமாகக் காலடி எடுத்து வைத்துள்ள இந்த வேளை, நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழும் நம் இளம்பிள்ளைகளின் குரல்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

நாட்டின்மீது அவர்கள் கொண்டுள்ள அளப்பரிய அன்பு, எதிர்காலத்தைப் பற்றிய ஒளிமயமான கனவுகளையும் லட்சியங்களையும் இந்தத் தொகுப்பு நம்முன் வைக்கிறது.

யுகேஷ் ராஜ் தங்கராஜு, 7.
யுகேஷ் ராஜ் தங்கராஜு, 7. -

“சிங்கப்பூர் என்பது இனம், மொழி, சமயம் என எந்தப் பாகுபாடின்றி அனைவரும் ஒன்றுபடும் ஒரு நாடு. மேலும், மற்ற கலாசார உணவுகளுக்கும் இங்குப் பற்றாக்குறை இல்லை. எதிர்காலத்தில் சிங்கப்பூரை மேலும் பாதுகாப்பாக வைத்திருக்க நான் ஒரு காவலராக விரும்புகிறேன்.” - யுகேஷ் ராஜ் தங்கராஜு

சிராஜ் வேலன், 12, (இடது), சியாத் வெற்றி, 10.
சிராஜ் வேலன், 12, (இடது), சியாத் வெற்றி, 10. -

“ஒரு சிங்கப்பூர்க் குடிமகனாக, ஆண்டுதோறும் தேசிய தின அணிவகுப்பைக் காண்பதில் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. அதுவும் பல மக்கள் ஒன்றுகூடி நம் தேசத்தின் பிறந்தநாளைக் கொண்டாடுவது மகிழ்ச்சியான ஒரு தருணம். எதிர்காலத்தில் நானும் அணிவகுப்பில் பங்குபெற ஆசைப்படுகிறேன்.” - சிராஜ் வேலன்

“குடும்பத்துடன் வீட்டில் தொலைக்காட்சிவழி தேசிய தின அணிவகுப்பைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். தேசிய தினப் பாடல்களை ஒன்றுகூடி பாடுவது, பற்றுறுதி எடுப்பது போன்ற அங்கங்கள் எனக்கு மிகவும் பிடித்தவை.” - சியாத் வெற்றி

யாஷனா அஷ்வின் பிள்ளை, 7.
யாஷனா அஷ்வின் பிள்ளை, 7. -

“தேசிய தினம் என்பது பல இன மக்களுடன் ஒன்றிணைந்து தேசத்தின் பிறந்தநாளைக் கொண்டாடுவது. வேற்றுமைகளை மறந்து மற்றவர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவது உலகையே ஒரு சிறந்த இடமாக மாற்றுகிறது என்று நம்புகிறேன்.” - யாஷனா அஷ்வின் பிள்ளை

ஹிரண்யா முகுந்தன், 7.
ஹிரண்யா முகுந்தன், 7. -

“எனக்கு தேசிய தினம் என்றால் கொள்ளைப் பிரியம்! மரினா பே வளாகத்தின் வண்ணங்கள் ஆண்டுதோறும் கண்ணைக் கவரும் வண்ணம் இருக்கும்!” - ஹிரண்யா முகுந்தன்

சைலேஷ், 5.
சைலேஷ், 5. -

“நாம் அனைவரும் ஒன்றிணைந்து நம் நாட்டைக் கொண்டாடுவதால் தேசிய தினம் ஒரு சிறப்பான நாள். நம் நாட்டை பாதுகாப்பாக, தூய்மையாக வைத்திருக்க உதவும் அனைவர்க்கும் நன்றிகூற விரும்புகிறேன்!” - சைலேஷ்

தாரா அஷ்வின் பிள்ளை, 5
தாரா அஷ்வின் பிள்ளை, 5 -

“நமக்கிடையேயான வேறுபாடுகளில்தான் நம் வலிமை இருக்கிறது. அதுவே சிங்கப்பூரை மிகவும் தனித்துவமானதாக மாற்றுகிறது. - தாரா அஷ்வின் பிள்ளை

திவ்யஜோதி, 9
திவ்யஜோதி, 9 -

“நாம் ஒன்றிணைந்து வெற்றிபெறப் பாடுபடுவதும், வெவ்வேறு பண்பாடுகள்மீது மதிப்பை வளர்த்துக்கொள்வதும் சிங்கப்பூரர்களாக இருப்பதன் அர்த்தம்.” - திவ்யஜோதி, 9

எரிஷா சுஜேஷ், 8
எரிஷா சுஜேஷ், 8 -

“நான் ஆண்டுதோறும் என் குடும்பத்துடன் அணிவகுப்பைப் பார்ப்பது தேசிய தினத்தின் மிகச் சிறந்த அம்சம்!” - எரிஷா சுஜேஷ்

பல்லவி வடிவேலன், 8
பல்லவி வடிவேலன், 8 -

“தோற்றத்திலோ மொழியிலோ நாம் எவ்வளவு வேறுபட்டிருந்தாலும், நாம் அனைவரும் சேர்ந்து கொண்டாடுவதே தேசிய தினம்.” - பல்லவி வடிவேலன்

வேதவள்ளி வடிவேலன், 11
வேதவள்ளி வடிவேலன், 11 -

“தேசிய தினம் என்பது சிங்கப்பூரின் சுதந்திரத்தைக் கொண்டாடுவது. கூடவே வாணவேடிக்கைகளையும் ரசிப்பது!” - வேதவள்ளி வடிவேலன்

யுகனேஷ்வரன் வடிவேலன், 9
யுகனேஷ்வரன் வடிவேலன், 9 -

“ஒவ்வோர் அணிவகுப்பின்போதும் வலம்வரும் செஞ்சிங்கங்கள்தான் எனக்கு மிகவும் பிடித்த அங்கம். அது சிங்கப்பூரின் மீள்திறனை வெளிப்படுத்துகிறது.” - யுகனேஷ்வரன் வடிவேலன்

தாரா தேவி சிவாஜி, 9
தாரா தேவி சிவாஜி, 9 -

“தேசிய தினம் ஒரு சிறப்பான நாள். ஏனென்றால் அது நம் நாட்டின் பிறந்தநாள். மேலும் அதனை நாம் நம் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகிறோம்!” - தாரா தேவி சிவாஜி

ருத்திரா தேவி சிவாஜி, 5
ருத்திரா தேவி சிவாஜி, 5 -

“தேசிய தினக் கொண்டாட்டங்களின்போது ​​நான் சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்து என் நண்பர்களுடன் நேரம் செலவிடவும் தேசிய கீதம் பாடவும் வாய்ப்பு கிடைக்கிறது. அது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது!” - ருத்திரா தேவி சிவாஜி

வருண் அன்புச்செழியன், 11
வருண் அன்புச்செழியன், 11 -

“ஒரு சிங்கப்பூர்க் குடிமகனாக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த ஆண்டு, தேசியக் கல்விக் காட்சியைக் காண என் பள்ளி நண்பர்களுடன் காலாங் தேசிய விளையாட்டரங்கத்திற்குச் சென்றேன். அங்கு முன்னோட்ட தேசிய தின அணிவகுப்பை நேரில் கண்டு, அனைவருடன் சேர்ந்து தேசியப் பாடல்களைப் பாடியது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. மேலும், எனது பல்லின நண்பர்களுடன் விளையாடுவதும் அவர்களின் கலாசாரங்களைப் பற்றி அறிந்துகொள்வதும் எனக்கு மிகவும் பிடிக்கும்.” - வருண் அன்புச்செழியன்

திவன் சேவ் ஜனார்த்தன், 5
திவன் சேவ் ஜனார்த்தன், 5 -

“எனக்குச் சிங்கப்பூர் பிடிக்கும். ஏனென்றால் என் குடும்பத்தினரும் நண்பர்களும் இங்கே இருக்கிறார்கள். மேலும், என்னால் பல மொழிகளையும் கற்றுக்கொள்ள முடியும்.” - திவன் சேவ் ஜனார்த்தன்

குறிப்புச் சொற்கள்