தமிழுக்குத் தொண்டாற்றும் சிங்கப்பூரர்களுக்கு ‘கலைவளர் செம்மல்’ விருது

தமிழ்­மொ­ழிக்­குச் சிறந்த முறை­யில் சேவை ஆற்­றி­ய­தற்­காக மூன்று சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு ‘கலை­வ­ளர் செம்­மல்’ என்ற விருது தமி­ழ­கத்­தில் வழங்­கப்­பட்­டுள்­ளது.

உலகப் புத்­தக தினத்தை ஒட்டி இம்மாதம் 26ஆம் தேதியன்று தமி­ழ­கத்­தின் திரு­நெல்­வேலி மாவட்­டத்­தில் நடத்­தப்­பட்ட பட்டி­மன்ற விழா ஒன்­றில் திரு­வாட்டி ஆர் தில­க­ராணி, திரு தமி­ழ­வேல், திரு­வாட்டி கே. கலை­ய­ரசி ஆகி­யோர் அந்த விரு­தைப் பெற்­ற­னர்.

தமி­ழக அர­சால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட இந்­தப் புதிய விருது, பட்­டி­மன்ற விழா­வின்­போது மொத்­தம் ஒன்­பது பேருக்கு வழங்­கப்­பட்­டது.

நெல்லை அரசு அருங்­காட்சி­ய­கம், அருணா இதயநல மருத்­து­வ­மனை, வ.உ.சி இலக்­கிய மாமன்­றம், சிங்­கப்­பூர் வள­மான, திவ்­ய­மான குடும்­பம் ஆகிய அமைப்­பு­கள் ஏற்­பாடு செய்த அவ்விழா, வண்­ணார்­பேட்டை அருணா இதயநலக் கலை­ய­ரங்­கில் நடந்­தே­றி­யது.

அருணா இதயநல மருத்­து­வ­ம­னை­யின் நிர்­வாகி டாக்­டர் அரு­ணாச்­ச­லம் நிகழ்ச்­சியை வழி­ந­டத்­தி­னார்.

‘நிறை­வான வாழ்க்கை பெரி­தும் கிடைப்­பது கிரா­மத்­திலா? நக­ரத்­திலா?’ என்­பது பட்­டி­மன்­றத்­தின் கருப்­பொ­ருள்.

‘கிரா­மத்­தில்’ என்ற அணிக்­காக திரு தமி­ழ­வேல், திரு­வாட்டி தில­க­ராணி, பெங்­க­ளூர் எஸ் ராஜேஸ்­வரி, மதுரை எஸ். விஜ­ய­ரா­ஜன் ஆகி­யோ­ரும் ‘நக­ரத்­தில்’ என்ற குழு­வுக்­காக திரு­வாட்டி கலை­ய­ர­சி­யு­டன் சென்னை குந்­தவி, மதுரை எஸ். விஜ­ய­ராஜன் ஆகி­யோ­ரும் உரை­யாற்­றி­னர்.

இந்­நி­கழ்ச்­சிக்­காக தமி­ழக பங்­கேற்­பா­ளர்­க­ளு­டன் செயல்­பட்ட அனு­ப­வம் இனி­மை­யா­க­யும் பய­னுள்­ள­தா­க­வும் இருந்­த­தாக சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த பங்­கேற்­பா­ ளர்­கள் தமிழ் முர­சி­டம் கூறி­னர்.

சிங்­கப்­பூ­ரர்­கள் மூவ­ருமே விஎஸ்­டிகே எனும் வள­மான, சிறப்­பான, திவ்­ய­மான குடும்­பம் என்ற தமிழ் ஆர்­வல அமைப்­பைச் சார்ந்­த­வர்­கள்.

“தாய் வீட்­டுக்கு நிக­ரான நல்ல வர­வேற்­பை­யும் உப­ச­ரிப்­பை­யும் பெற்­றோம். டாக்­ட­ரும் அவ­ர்தம் துணை­வி­யா­ரும் வ.உ.சி இலக்­கிய மாமன்­றத் தலை­வர் களும் எங்­களை நன்­றா­கக் கவனித்து, விரு­தும் வழங்­கி­னர்,” என்­றார் திரு­வாட்டி தில­க­ராணி.

இவரைப் போலவே தமது அனு­ப­வ­மும் சுவை­யாக இருந்­த­தாக மற்­றொரு சிங்­கப்­பூர் பங்­கேற்­பா­ள­ரான திரு­வாட்டி கலை­ய­ரசி கூறி­னார்.

மூத்த தொலைக்­காட்சி கலை­ஞரான திரு­வாட்டி கலை­ய­ர­சிக்குப் பட்­டி­மன்றச் சூழ­லில் உரை­யாற்­று­வது இது மூன்­றா­வது முறை.

“எனவே, தொடக்­கத்­தில் தயக்­க­மாக இருந்­தது. ஆனால் சக பங்­கேற்­பா­ளர்­களும் நடு­வரும் எனக்கு ஊக்­கம் கொடுத்து உரை­யாற்­று­வ­தற்­கான உத்­தி­க­ளை­யும் சொல்­லித் தந்­தார்­கள்,” என்­றார்.

இந்நிகழ்ச்­சி­யின் வெற்­றிக்கு சிங்­கப்­பூ­ரர்­கள் பெரும்­பங்கு அளித்­த­தாக ‘நெல்லை கவி­ஞர்’ கோ.கண­பதி சுப்­பி­ர­ம­ணி­யன் தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தார்.

இது­போன்ற சொல்­வேந்­தர் கருத்­த­ரங்­கங்­கள், பட்­டி­மன்­றங்­கள் ஆகி­ய­வற்­றில் சிங்­கப்­பூர் இளை­யர்­களும் கலந்­து­கொண்­டும் ஏற்­பாடுகள் செய்­தும் தமிழை வளர்க்­க­வேண்­டும் என ஆசைப்­ப­டு­வ­தாக திரு­வாட்டி தில­க­ராணி கூறி­னார்.
 

காணொளி இணைப்பு - https://youtu.be/PdODko55Ddw

 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!