இர்ஷாத் முஹம்மது
தமிழை வளர்த்தபோதிலும் வயதை வளர்க்காத இளம் இயக்கமாகத் திகழும் வளர்தமிழ் இயக்கத்தில் இளையர்கள் சேர்க்கப்படுவது இது முதல்முறையன்று. சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவி ஜெயசுதா சமுத்திரன், பொதுச் சேவை துறையில் பணியாற்றும் கார்த்திக் ராமசாமி, ஆசிரியர் தர்ஷினி தமிழ்செல்வன் போன்ற வர்கள் வளர்தமிழ் இயக்கத்தில் பல ஆண்டுகள் சேவையாற்றி அடுத்து வரும் இளையர்களுக்கு வழிவிட்டுள்ளனர்.
இச்செய்தியைப் படைக்கும் நானும் கடந்த நான்கு ஆண்டு களாக வளர்தமிழ் இயக்கத்தில் அங்கம் வகித்துத் தொடர்ந்து உறுப் பினராகச் சேவையாற்றுகிறேன். இப்போது மேலும் மூன்று இளை யர்கள் சேர்ந்திருப்பது வரவேற்கத் தக்க ஒன்று. இளையர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பதோடு நின்றுவிடாமல் காலத்திற்கேற்ப மாற்றங்களைக் கொண்டுவரும் முயற்சியில் பங் கெடுக்கக் கடப்பாடு கொண்டுள் ளோம். புதிய பொறுப்புக் குறித்துக் கருத் துரைத்த ஆக இளைய உறுப்பின ரான அஷ்வினி செல்வராஜ், 20, "புதிய நிகழ்ச்சிகளைப் படைப்பது என் நோக்கமல்ல. தற்போதுள்ள நிகழ்ச்சிகளை மேம்படுத்துவது முக்கியம்.
"ஒரு மாணவியாக என்னால் எட்டக்கூடிய தளங்கள் மூலம் நிகழ்ச்சிகளுக்கு வருபவர்களின் கருத்துகளின் அடிப்படையில், தரத்தைக் கூட்டுவதற்கான வழி களை ஆராய்வேன்," என்றார்.
வளர்தமிழ் இயக்கத்தின் புதிய உறுப்பினர்கள் (இடமிருந்து) சுந்தர் பிலவேந்தர்ராஜ், அஷ்வினி செல்வராஜ், ஹரிணி வி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

