தமிழ்மொழியைச் சீரிய முறையில் வளர்க்கும் உயரிய நோக்குடன் வளர்தமிழ் இயக்கம் 1999 செப் டம்பர் 4ஆம் தேதி உதயமானது. அவ்வியக்கம் தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே அதன் பணி களுக்கு ஆதரவளிக்க $400,000 நிதி திரண்டது. தமிழ்மொழியை வளர்ப்பதற்காக பல நிகழ்ச்சிகளை நடத்த $1.5 மில்லியன் திரட்ட இயக்கம் இலக்கு கொண்டிருந்த தாக அறிவிக்கப்பட்டது. தற்போது அதன் மொழி வளர்ப்பு முயற்சிகளுக்கு அரசாங் கம் பெருமளவில் நிதி ஆதரவு கொடுத்துவருகிறது. சமூகமும் அரசாங்கமும் இணைந்து தமிழ் மொழியின் எழுச்சிக்குப் பங் காற்றி வருகின்றன. மக்களும் அதற்கு இணையான ஆதரவை வழங்கி வருகின்றனர்.
மக்கள் வழங்கிய நிதி ஆதரவுக்கு நன்றிகூறும் தேநீர் விருந்தில் அன்றைய துணைப் பிரதமராகப் பொறுப்பு வகித்த திரு லீ சியன் லூங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருடன் வளர்தமிழ் இயக்கத்தின் முதல் தலைவரும் அப்போதைய தமிழ் முரசு ஆசியருமான திரு வை திருநாவுக்கரசு. கோப்புப் படம்: சாவ் பாவ்

