சமூக மனப்போக்கை மாற்ற முனையும் மகளிர்

சமூக மனப்போக்கை மாற்ற முனையும் மகளிர்

1 mins read
887109bb-37d0-424a-9717-a6e0ea7ae718
-

வைதேகி ஆறுமுகம்

பெண்களைப் பற்றிய காலத்திற்கு ஒவ்வாத மனப்போக்குகளை மாற்ற அவர்கள் தைரியத்துடன் பேச முன்வரவேண்டும். இதனை ஊக்குவிக்கும் கலந்துரையாடல் ஒன்று கடந்த மாதம் நடை பெற்றது. "ஹவ் புரோக்கன் இஸ் இட்?" எனும் தலைப்பைக் கொண்டுள்ள இந்தக் கலந்து ரையாடலுக்கு சிண்டா எனும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் இளையர் மன்றம் ஏற்பாடு செய்தது. வேலையிடங்களில் பெண் கள் எதிர்நோக்கும் பாகுபாடு, நெருக்குதல்கள் ஆகியவை பற்றி கலந்துரையாடலில் பேசப்பட்டது.

வெவ்வேறு தலைமுறையினர் பங்கேற்ற இந்தக் கலந்துரை யாடலில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் உரையாற் றினர். சிங்கப்பூரில் தற்போதுள்ள ஒரே முழுநேர பெண் மேடை நகைச்சுவைக் கலைஞர் ஷாருல் சன்னா, நிர்வாக பங்குதாரர் ப்ரெண்டா ஹான், ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரஹாயு மஹ்ஸாம் , வழக்கறிஞர் நெட்டலி மோரிஸ் ஷர்மா ஆகியோர் பெண்ணியம் குறித்து தங்களுடைய கருத்து களை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் திருமணமான வர்கள். திருமணமான பெண்களுக்கு இருக்கும் குடும்பச் சுமையை ஒரு காரணமாகக் கொண்டு அவர் களுக்குப் பதவி உயர்வு கொடுக் கப்படாதது குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டன.

ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரஹாயு மஹ்ஸாம் (இடமிருந்து 2வது) உள்ளிட்ட, பல்வேறு துறைகளில் வேலை செய்யும் திருமணமான பெண்கள் ஐவர், பெண்ணியம் குறித்து தங்கள் கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்கின்றனர். படம்: சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம்