எஸ்.வெங்கடேஷ்வரன்
'டிஸ்லெக்சியா' எனப்படும் கற்றல் குறைபாட்டைக் கடந்து வந்து சமூகத்திற்குப் பயனுள்ள வழியில் தன் நிரலிடுதல் திறன் களைப் பயன்படுத்தி வரும் திரு கி ஜகதீஸ்வரனுக்கு, 19, சென்ற வாரம் தேசிய இளம் சாதனை யாளருக்கு தங்க விருது கிடைத்தது. இம்மாதம் 4ஆம் தேதியில் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற் கல்லூரியில் நடைபெற்ற விழா வில் 182 இளையர்களுக்கு தேசிய இளம் சாதனையாளர் தங்க விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் அதிபர் ஹலிமா யாக்கோப் மற்றும் நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் கலந்துகொண்டனர். சேவை மனப்பான்மையில் சிறந்து விளங் கும் இளையர்களை இந்த விருது அங்கீகரிக்கிறது. "பூமியிலிருந்து கிடைத்த தங்கத்தைவிட, மனிதர்களின் எண்ணங்களின் மூலம் உருவா கிய தங்கம்தான் அதிகம் என்று ஒரு எழுத்தாளர் கூறியுள்ளார்,
தேசிய இளம் சாதனையாளர் தங்க விருதை வென்ற கி ஜகதீஸ்வரன் (வலது) தனது துணைப்பாட ஆசிரியர் டேனியல் டானுடன் கணினியில் நிரலிடுவதில் ஈடுபடுகிறார். படம்: திருமதி அமுதா சுப்பிரமணியம்

