டாக்டர் அப்துல் கலாமின் 87வது பிறந்தநாளை 'டாக்டர் அப்துல் கலாம் விஷன் சொசைட்டி' என் னும் இலட்சிய கழகம் அக் டோபர் 14ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை கொண்டாடி யது. சேவை செய்வதன் மூலம் சேவைக்காகவே பிறந்த ஒரு மாபெரும் தலைவரை நினைவு கூர்ந்த இந்நிகழ்ச்சியில் சிறுவர் முதல் பெரியவர் வரை சுமார் 100 சமூக உறுப்பினர்கள் கலந்துகொ ண்டனர். லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) ஆதரவோடு ஏற் பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சி இந்திய மரபுடைமை வளாகத்தில் நடைபெற்றது. இதில் அமைப்பின் தலைவர் திரு கே.கேசவபாணி வரவேற்புரை ஆற்றினார்.
தேசிய சுற்றுப்புற அமைப்பைச் சேர்ந்த திரு பிரண்டன் லோ வெள்ளை, சிவப்புப் பைகள் மற்றும் துப்புரவு செய்வதற்கான வேறு உபகரணங்களையும் அனைவருக் கும் விநியோகம் செய்து துப்புரவுப் பணி குறித்து விளக்கினார். மறுபயனீட்டுக்கான குப்பை களை வெள்ளைப் பையிலும் மற்றவற்றைச் சிவப்புப் பையிலும் சேகரிக்கச் சொல்லிக் கூறப் பட்டது. பின்னர் உறுப்பினர்கள், ஐவர் கொண்ட குழுக்களாகப் பிரிந்து காலை ஆறு மணிக்குத் தொடங்கி நண்பகல் 12 மணி வரை துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் இந்திய மரபுடைமை நிலையத்தில் ஆரம்பித்து டன்லப் ஸ்திரீட், கேம்பல் லேன் முதலிய இடங்களில் சுத்தம் செய்தனர்.
அத்துடன் நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருட்கள் பயன் படுத்துவதைக் குறைத்துக்கொள்ள மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையில் 500 சுவரொட்டி களையும் ஒட்டினர். துப்புரவுப் பணிகள் முடிவுற்ற நிலையில் 500 கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டன. அப்துல் கலாம் என்ற சேவை நாயகனின் "உங்களுக் காக நான் என்ன செய்ய முடியும்?" என்னும் இலட்சியத்திற்கு ஓர் எடுத்துக் காட்டாக தொண்டர்கள் இச்சேவை யில் ஈடுபட்டனர். இதன் தொடர்பில் திரு லோ, "குப்பைகளை அகற்றுவது மட்டும் இந்த சேவையின் நோக்கமல்ல, அவற்றைக் குறைப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் நோக்கம்தான்," என்று குறிப் பிட்டார். சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூ துப்புரவுப் பணியில் இறங்கியதைத் தாம் நேரடியாகப் பார்த்த அனுபவம் பற்றியும் அவர் பகிர்ந்துகொண்டார்.
தேக்கா பகுதியில் தாங்கள் சேகரித்த குப்பைகளுடன் அப்துல் கலாம் இலட்சிய கழகத் தொண்டூழியர்கள். படங்கள்: நாதன் வீடியோஸ்

