நூல் வெளியீட்டில் ஒன்றிணைந்த கவிஞர்கள்

நூல் வெளியீட்டில் ஒன்றிணைந்த கவிஞர்கள்

1 mins read
bf1a9e8b-0284-4d13-b1e7-096aca5491e9
-

திரு முஹைதீன் அன்வார் எழுதிய 'அரிதாரம்' என்ற சிறுகதைத் தொகுப்பும் 'சுவாசம்' மற்றும் 'மௌனத்தின் இரைச்சல்கள்' என்ற கவிதைத் தொகுப்புகளும் இம்மாதம் 13ஆம் தேதி தேசிய நூலகத்தில் வெளியீடு கண்டன. கவிஞர் பழநிபாரதி கவிதை களைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் தனது மெல்லிசைக் குரலில் கருத்தாழத்துடன் சிறப்புக் கவியுரை ஆற்றி மூன்று நூல் களையும் வெளியிட்டார். 'தமிழ் அலை' ஊடகத்தின் நிறுவனர் கவிஞர் இசாக் நட்புரை நிகழ்த்தி நிகழ்வைச் சிறப்பித்தார். நூலாசிரியரின் பெற்றோர் கவிஞர் பழநிபாரதியிடமிருந்து முதல் நூல் தொகுப்புகளைப் பெற்றுக்கொண்டனர். கவிஞர் க.து.மு. இக்பால், திரு. A.P. ராமன், திரு. மா. அன்பழகன் ஆகியோரும் கவிஞர் பழநிபாரதியிடமிருந்து நூல் தொகுப்புகளைப் பெற்றுக்கொண் டனர். வெளியிடப்பட்ட நூல்கள் ஆசிரியரின் ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாவது நூல் தொகுப்பு களாகும். செய்தி: திரு முஹைதீன் அன்வார்