சிங்கப்பூர் பொதக்குடி சங்கம் ஐந்தாம் ஆண்டு நிறைவை ஓட்டிக் குடும்ப ஒன்றுகூடல் நிகழ்ச்சியைப் பாசிர் ரிஸ் பூங்காவில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ஏற்பாடு செய்திருந்தது. கிட்டத்தட்ட 90 குடும்பங் கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அத்துடன் சென்ற கல்வி ஆண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்றுச் சிறப்புத் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு ரொக்க தொகைகள் உள்ளிட்ட ஊக்கப் பரிசுகள் வழங்கப் பட்டன. சிறப்பு விருந்தினராக பங் கேற்ற முஸ்லிம் லீக் சிங்கப்பூர் சமூக நல்லிணக்க சேவை அமைப்பின் தலைவரான புதிய நிலா மு.ஜஹாங்கீர் கலந்து கொண்டார். தீவு முழுவதும் பொதக்குடி சங்கத்தைச் சேர்ந்த மக்கள் 'மாமா கடைகள்' என்கிற சில்லறைப் பொருட்கள் விற்கும் கடைகள் மூலம் நாட்டின் பொருளியலுக்கு மட்டும் அல்லாமல் சமூக நல்லிணக்கத் திற்கும் வித்திட்டனர் என்றார். சிங்கப்பூரில் வாழ்ந்த, வாழும் பொதக்குடி மக்கள் பற்றிய தகவல்களைப் புகைப்படங்களுடன் ஆவணப்படுத்தும் வகையில் வரலாற்று நூலை வெளியீடு செய்யுமாறு வேண்டுகோளும் விடுத்தார். செய்தி: சிங்கப்பூர் பொதக்குடி சங்கம்
ஒன்றுகூடி மகிழ்ந்த சிங்கப்பூர் பொதக்குடி சமூகத்தினர்
1 mins read
-

