பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை நினைவுகூர்ந்த பட்டிமன்றம்

மக்கள் கவிஞர் மன்றம் நடத்திய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத் தின் 59வது நினைவு நாளை முன்னிட்டுப் பட்டிமன்றமும் சொற் பொழிவும் இம்மாதம் 13ஆம் தேதி தேசிய நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. மன்றத்தின் செயலாளர் திரு வீ.ராசாராம் வரவேற்புரை ஆற்றினார். மன்றத்தின் தலைவர் திரு பா.உத்திராபதி தமது தலைமை உரையில் மக்கள் கவிஞரின் பாடல் வரிகளில் பொதிந்துள்ள பொருள் சிங்கப்பூருக்கும் மிகப் பொருத்தமாக இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

சிறப்பு விருந்தினராகப் பங் கேற்று உரையாற்றினார் கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பிரிவின் உதவி இயக்குநர் முனைவர் த.வேணுகோபால். மக்கள் கவிஞர் எளிய சொற் களைக் கொண்டு வலிமையான சிந்தனைகளைத் தூண்டியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியதோடு மாணவர்கள் பங்குபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து 'வாழ்வுக்கு வழி காட்டும் மக்கள் கவிஞர்' என்ற தலைப்பில் செயின்ட் ஆண்ட்ரூஸ் தொடக்க கல்லூரி மாணவி செல்வி அருணா கந்தசாமி சொற் பொழிவு ஆற்றினார். இறுதி அங்கமாகக் கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பிரிவின் மூத்த பாடத்திட்ட வரைவு அதிகாரி முனைவர் ச.ஜெகதீசன் பட்டிமன்றத்தைத் தலைமை தாங் கிச் சிறப்பாக வழிநடத்தினார். 'மக்கள் கவிஞரின் பாடல் வரிகளில் விஞ்சி நிற்பது உழைப் பாளர்களுக்கான சிந்தனையே இல்லை, இளைஞர்களுக்கான சிந்தனையே' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. தேசிய தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களும் சீடார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவிகளும் கலந்துகொண்டு தங்கள் கருத்து களைச் சிறப்பாக வெளிப் படுத்தினர்.

செய்தி: மக்கள் கவிஞர் மன்றம்

பட்டிமன்ற மாணவப் பேச்சாளர்களுடன் அதை வழிநடத்திய நடுவர் திரு ஜெகதீசன் (நடுவில்). படம்: மக்கள் கவிஞர் மன்றம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!