கஜா புயல் நிவாரண நிதி திரட்டு முயற்சி

கஜா புயல் நிவாரண நிதி திரட்டு முயற்சி

1 mins read
0a298f4d-3ed2-4c85-90ae-a1b248daf9a8
-

தமிழ் நாட்டை உருக்குலைய வைத்த கஜா புயலின் தாக்கத்தால் இன்றுவரை ஆயிரக்கணக்கான மக்கள் அவதியுற்று வருகிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வண்ணம் தனிப்பட்ட வகையில் முயற்சி எடுத்துள்ளார்கள் சில இளையர்கள். செல்வி கார்த்திகாயினி செந்தில்குமரன், செல்வி வைஷ்னவி நாயுடு, செல்வி ஆர்த்தி அச்சுதப்பா ஆகியோருடன் மேலும் பலர் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். திரட்டப்பட்ட நிதியை இங்கு பணி புரியும் மூன்று தமிழகப் பணிப்பெண்களுக்கு வழங்க முன்வந்துள்ளனர்.

இம்மாதம் 13ஆம் தேதியில் நிதி திரட்டு முயற்சிக்கான நிகழ்ச்சி, லிட்டில் இந்தியாவில் அமைந்துள்ள 'அல்டிராசுப்பர்நியூ கேலரி'இல் (Ultrasupernew Gallery) இவர்களால் நடத்தப்பட்டது. வெளிநாட்டு ஊழியர்களின் கவிதைப் படைப்புகளும் நடன நிகழ்ச்சிகளும் இதில் இடம்பெற்றன.

இவர்களது இந்த முயற்சிக்கு நன்கொடைகள் வழங்க விரும்பியவர்கள் https://gogetfunding.com/uniting-for-cyclone-gaja-sg/ என்ற இணைப்பக்கத்தை நாடலாம்.