இளையர்களின் ‘கஜா’ நிவாரண நிதித்திரட்டு

எஸ்.வெங்கடேஷ்வரன்

தமிழ்நாட்டை உருக்குலைத்த கஜா புயலின் தாக்கத்தால் இன்றுவரை லட்சக்கணக்கான மக்கள் அவதியுற்று வருகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உத வும் வண்ணம் தனிப்பட்ட வகை யில் சில இளையர்கள் முயற்சி எடுத்துள்ளார்கள்.
செல்வி கார்த்திகாயினி செந்தில்குமரன், செல்வி வைஷ்ணவி நாயுடு, செல்வி ஆர்த்தி அச்சுதப்பா ஆகியோருடன் மேலும் பலர் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


திரட்டப்பட்ட நிதியை இங்கு பணிபுரியும் மூன்று தமிழகப் பணிப்பெண்களுக்கு வழங்க முன்வந்துள்ளனர் இவர்கள்.
"தமிழ்நாட்டில் இருந்தும் இலங்கையிலிருந்தும் இங்கு வந்து வேலை செய்யும் பணிப் பெண்களுக்கு ஆங்கில வகுப்புக் களை வழிநடத்தும் தொண்டூழியர் சேவையில் ஈடுபட்டிருந்தபோது, கஜா புயலின் மோசமான தாக்கம் பற்றி பணிப்பெண்கள் மூலம் எங்களுக்குத் தெரிய வந்தது.
"பணிப்பெண்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்காக நிதி திரட்டும் முயற்சியை மேற்கொண் டிருந்ததை அறிந்து அவர்களுக்கு உதவ விரும்பினோம்," என்றார் வைஷ்ணவி.


'கொ கெட் ஃபண்டிங்' என்ற இணையத்தளத்தில் நிதி திரட்டும் முயற்சியையும் இவர்கள் மேற் கொண்டுள்ளனர்.
இம்மாதம் 13ஆம் தேதி லிட்டில் இந்தியாவில் அமைந்துள்ள 'அல்டிரா சூப்பர் நியூ கேலரி'யில் நிதி திரட்டு முயற்சிக்கான கலைநிகழ்ச்சி ஒன்றை இவர்கள் நடத்தினர். இம்முயற்சி பற்றிய விழிப்பு உணர்வை உருவாக்கவும் பொது மக்களுக்கு விவரங்களை வழங் கவும் Uniting for Cyclone Gaja என்ற ஃபேஸ்புக் பக்கத்தை இந்த இளையர்கள் உருவாக்கினர்.


"ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று தோன்றியது. கலை மூலம் கஜாவைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கத்துடன் 'தி இன்வர்டட் டான்ஸ் பிரமிட்' எனும் நடன அமைப்பின் உதவியை நாடினேன். நண்பர்களின் ஆதரவுடன் கலை நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத் தினோம்," என்றார் செல்வி கார்த்திகாயினி, 30. வெளிநாட்டு ஊழியர்களின் கவிதைப் படைப்புகளும் நடன நிகழ்ச்சிகளும் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றன. கஜா புயலின் பாதிப்பைத் தனது கவிதையால் பிரதிபலித்த திரு ந.ரெங்கராஜன் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து சிங்கப்பூருக்கு வந்து கட்டுமானத் துறையில் பணியாற்றி வருகிறார்.

"புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை இதுவரை, இயற்கைக் காய்ந்து கெடுக்கும், இல்லையேல் அறுவடைக் காலங் களில் (மழை) பேய்ந்து கெடுக்கும். இப்போது அடியோடு பெயர்த்துக் கெடுத்துவிட்டது மன(ர)ங்களை," என்பது அவரது கவிதை வரிகளில் ஒன்று.
இன்னொரு கவிதையைப் படைத்தவர் 42 வயதான திரு வாட்டி காந்திமதி அருணாச்சலம். 14 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிப்பெண்ணாக வேலை செய் யும் இவர், தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து வந்தவர். தமது தங்கையான 34 வயது திருமதி தனலெட்சுமி, வட்டலாம்பட்டி கிராமத்தில் தினமும் சுமார் 125 குடும்பங்களுக்கு உணவும் அத்தியாவசிய பொருட்களும் வழங்கி வருவதாகச் சொன்னார் காந்திமதி.
"நம்ப படிச்சது வளர்ந்தது எல்லாமே விவசாயத்தை நம்பித் தான். நிறைய கடன் வாங்கி விவசாயத்தில் முதலீடு செய்திருந் தோம். இப்போது மீண்டும் வழக்க நிலைக்கு வருவதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம்."


"எங்களைப்போல கிராமத்து மக்களுக்குத் தேவையான உடனடி நிவாரணம் கிடைக்காது. நிறைய பேரின் கூரை வீடு அழிந்து போய், 'ரேஷன்' கடையில் தங்குகிறார்கள். இப்போதைக்குப் பணம்தான் அத்தியாவசியமாக தேவைப்படு கிறது. பால் மாவு, குடிக்கும் நீர், அரிசி போன்ற அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பணம் உதவும்," என்றார் காந்திமதி.


இவர்களது இந்த முயற்சிக்கு நன்கொடைகள் வழங்க விரும்பு வோர் https://gogetfunding.com/uniting-for-cyclone-gaja-sg/ என்ற இணையப்பக்கத்தை நாடலாம். மேல் விவரங்களுக்கு https://www.facebook.com/events/266805197351000/
என்ற ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்க்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!