கலைஞர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் புத்தாக்க இந்திய கலையகம்

கலைஞர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் புத்தாக்க இந்திய கலையகம்

1 mins read
60c24d84-f0f7-4fd0-83fe-b1d09620939c
-

சிங்கப்பூரில் இந்தியக் கலை களைப் புத்தாக்கச் சிந்தனை களோடு படைக்கும் நோக்கில் லாப நோக்கமற்ற கலை நிறுவனமாக உருவாகி இருக்கும் புத்தாக்க இந்திய கலையகம் (IIAC) தனது, செயல் திட்டங் களையும் அமைப்பு, கட்டமைப்பு களையும் அறிமுகம் செய்யும் வகையில் உறுப்பினர்களுடன் ஒன்று கூடும் முதல் நிகழ்ச்சி இம்மாதம் 16ஆம் தேதி மாலை சிண்டா அரங்கில் நடந்தது. அமைப்பின் நிறுவனர் சி. குணசேகரன், அமைப்பு உருவாக் கப்பட்டதன் அடிப்படை நோக்கங் களை எடுத்துரைத்தார். தரமான மாறுபட்ட கலை அனுபவங்களை அனைவருக்கும் வழங்கும் உன்னத படைப்புகளை உருவாக்குதல், தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கொண்டு இந்தியக் கலைகளைத் தொழில் நுட்ப மின்னாக்கங்கள் வழி உலகமயமாக்கும் எண்ணங் களைக் கொண்ட இளம் கலை ஞர்கள், பண்பட்ட மூத்த படைப் பாளர்களோடு பயணித்து அனுபவங்களைக் கற்றுக் கொள்ளுதல் ஆகியவை பற்றி அவர் பகிர்ந்துகொண்டார்.

புத்தாக்க இந்திய கலையகம் எனும் அமைப்பின் நிறுவனர் சி. குணசேகரன் (இடது), இவ்வமைப்பு உருவாக்கப் பட்டதன் அடிப்படை நோக்கங்களை உறுப்பினர் களிடையே எடுத்துரைத்தார்.