ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலய கல்வி உபகாரச் சம்பளம்

டெப்போ சாலையில் அமைந் துள்ள ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயம் 23வது ஆண்டாக மாணவர்களுக்குக் கல்வி உபகாரச் சம்பள விருதுகளை வழங்கியிருக்கிறது. வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் ஹங் கியாங் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தின ராகக் கலந்துகொண்டார். ஆலயத்தின் புரவலர் ஸ்ரீநிவாஸ் ராய், அறங்காவலர் டாக்டர் ரா. கருணாநிதி, அனைத்துச் சமய மன்றத்தின் துணைத் தலைவர் கேசவபாணி, சிண்டா வின் தற்காலிகத் தலைமை நிர்வாக அதிகாரி இரா.அன்பரசு, திரு குருபக் சிங், செல்வி செல்வமலர் உட்பட பலரும் இந்நிகழ்ச்சி யில் கலந்துகொண்டனர். பிள்ளைகளின் கல்விப் பயணத்தில் வசதி குறைந்த குடும்பச் சூழல் ஒரு தடையாக இருக்கக் கூடாது எனும் நோக் கில், கடந்த 23 ஆண்டுகளாக கல்வி உபகாரச் சம்பளங்களை வழங்கி மாணவர்களை ஊக்கு வித்து வருகிறது ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயம்.

பாலர் பள்ளி முதல் பல்கலைக் கழகம், பலதுறைத்தொழிற் கல் லூரி, தொழில்நுட்பக் கல்வி கழகம் என அனைத்து நிலை களிலும் பயிலும் 184 மாணவர் களுக்கு இனம், மொழி, சமய வேறுபாடுகள் இன்றி மொத்தம் $70,000 மதிப்புள்ள கல்வி உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டது. மேலும் வசதி குறைந்த மாண வர்களுக்கு $5,000 மதிப்புள்ள என்டியுசி பற்றுச்சீட்டுகளும் வழங் கிக் கைகொடுத்தது ஆலயம்.

தெலுக் பிளாங்கா அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் லிம் ஹங் கியாங் (நடுவில்) கல்வி உபகாரச் சம்பள விருதுகளை வழங்கினார். வலப்பக்கத்தில் ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயத்தின் தலைவர் வி. அழகப்பன். படம்: ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!