வரலாற்றில் வாழும் எம்ஜிஆர்

எஸ்.வெங்கடேஷ்வரன்

‘மக்கள் திலகம்’ என அன்புடன் அழைக்கப்படும் மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) இன்றும் தங்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருக் கிறார் என்பதை அவரின் ரசிகர்கள் நிரூபித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமையன்று, எம்.ஜி.ஆரின் 31ஆவது நினைவு நாளில், அவரது புகழைக் கொண்டாட சிங்கப்பூரின் பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டன.

கடந்த 31 ஆண்டுகளாக எம்.ஜி.ஆரின் நினைவுநாளைக் கொண்டாடிவரும் அவரது தீவிர ரசிகர் மன்றம் ஒன்று, இவ் வாண்டும் மறவாமல் நினைவஞ்சலி செலுத்தியது. அக்குழுவைச் சேர்ந்த சுமார் 20 பேர் ஒருநாள் முழுவதும் எம்.ஜி.ஆரை நினைவுகூரும் நிகழ்ச்சிகளை வழிநடத்தினர். அன்றையதினம் காலை ஸ்ரீ சிவன் கோயிலுக்குச் சென்று ஆத்ம சாந்தி பிராத்தனைகளைச் செய்ததை அடுத்து, மெல்ரோஸ் இல்லம் எனப்படும் சிறுவர் இல்லத்திற்குச் சென்று மதிய உணவுடன் இதர பொருட்களையும் அன்பளிப்பாக வழங்கினர்.