பொதுச்சேவை புரிந்து புத்தாண்டு கொண்டாடிய ஊழியர்கள்

எஸ்.வெங்கடேஷ்வரன்

கலை, கலாசார, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு புத்தாண்டை வாணவேடிக்கை களுடனும் வண்ணமயக் கொண் டாட்டங்களுடனும் பலரும் வரவேற் றனர். ‘வெஸ்ட் லைட் டோமிட்டிரி’யைச் சேர்ந்த ஏழு வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் புத்தாண்டைச் சற்று வித்தியாச மாகக் கொண்டாடினர். வசதி குறைந்த குடும்பம் ஒன்றின் வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். அங் மோ கியோவில் அமைந்து உள்ள கெபுன் பாரு வட்டாரத்தில் வசிக்கும் திரு முகம்மது ஃபிர்டாவோஸ் குடும்பத்தாரின் வீட்டுக்குச் சாயம் பூசியதுடன் வீட்டின் கழிவறைக்குப் புதிய கதவை மாற்றியும் பழைய விளக்குகளை அகற்றிப் பிரகாச மான, புதிய விளக்குகளை மாற்றி அமைத்தும் உதவினர். இளஞ்சிவப்பு, பச்சை, நீலம் முதலிய வண்ணங்கள் கொண்ட சாயத்தைப் பூசுமாறு கேட்டுக் கொண்ட திரு ஃபிர்டாவோஸ் குடும்பத்தாரின் விருப்பத்திற்கு ஏற்ப வீட்டுக்குச் சாயம் பூசப்பட் டது.

“எங்கள் வீட்டைப் புதுப்பித்துச் சுமார் ஐந்து ஆண்டுகள் ஆகின் றன. அதிக செலவாகலாம் என்ற காரணத்தால் இருக்கும் அடிப்படை வசதிகளைப் பொறுத் துக்கொண்டு வாழ்ந்தோம். “ஆனால் இப்போது எங்கள் வீடு புதிய வீடுபோல் உள்ளது. என் பிள்ளைகள் வசிப்பதற்கு மட்டுமல்லாமல் படிப்பதற்கும் உகந்த இடமாக இது மாறியுள்ளது. பிள்ளைகளுக்குப் பள்ளியில் புது ஆண்டும் தொடங்குவதால், இந் தப் புதுப்பிப்புப் பணிகள் சரியான நேரத்தில் செய்யப்பட்டுள்ளன,” என்றார் திரு ஃபிர்டாவோஸ், 35. திரு ஃபிர்டாவோசின் மனைவி ஓர் இல்லத்தரசி. நான்கு குழந் தைகளுக்குத் தந்தையான திரு ஃபிர்டாவோஸ், குடும்பத்துடன் கடந்த 10 ஆண்டுகளாக அவ்வீட் டில் வசித்து வருகிறார். உணவு விநியோகத் துறையில் பணிபுரிந்து கொண்டிருந்தவருக் குக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்பட்ட விபத்தால் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

வீட்டு வருமானம் அவர் ஒருவரை மட்டுமே நம்பி இருந்த நிலையில் காயம் ஏற்பட்டதால் அவர் வேலைக்குச் செல்ல முடியாமல் போனது. இதனால் கடந்த சுமார் 9 மாதங்களாக வருமானம் இன்றி அவர் குடும்பம் தவித்து வருகிறது. “என் உடல்நிலை இன்னமும் மோசமாகத்தான் இருக்கிறது. தற்போது எங்களுக்குப் பல அரசாங்க, சமூக அமைப்புகள் கைகொடுத்து வருவதால் கொஞ்சம் சமாளிக்க முடிகிறது,” என்றார் திரு ஃபிர்டாவோஸ். அவர் குடும்பத்திற்கு உதவி வழங்கி வரும் ஒரு முக்கிய அமைப்பு ‘பியோன்ட் சோஷல் சர்விசஸ்’. இந்த அமைப்பு கடந்த சுமார் இரு ஆண்டுகளாக கெபுன் பாரு வட்டாரத்தின் 244, 245 ஆகிய புளோக்குகளின் வாடகை வீடு களில் வாழ்ந்து வரும் குடும்பங் களுக்கு ஆதரவளித்து வருகிறது.

இலவச துணைப்பாட வகுப்பு கள், சிறார்களுக்கான விளை யாட்டு நிகழ்ச்சிகள், பண்டிகைக் கொண்டாட்டங்கள் போன்ற பல தரப்பட்ட நடவடிக்கைகளைக் குடி இருப்பாளர்களுக்காக அமைப்பு ஏற்பாடு செய்து தருகிறது. அவ்வாறு உதவி நல்கிய ஒரு சந்தர்ப்பத்தின்போதுதான் திரு ஃபிர்டாவோஸ் குடும்பத்தாரின் இக்கட்டான குடும்பச் சூழலைப் பற்றி அமைப்புக்குத் தெரிய வந் தது. அமைப்பு அவர்களுக்கு உதவ விரும்பியதால், ‘வெஸ்ட் லயிட் டோமிட்டிரி’ ஊழியர்களைத் தன் தொண்டூழியத் திட்டத்தில் இணைத்தது. “ஊழியர்களுடன் சேர்ந்து, அதே வட்டாரத்தில் வசித்த சில சிறுவர்களும் முன்வந்து திரு ஃபிர்டாவோஸ் குடும்பத்தார் வீட்டைப் புதுப்பிக்க உதவினர். ஒட்டுமொத்தத்தில் இதில் சமூக உணர்வைக் கண்ணால் பார்க்க முடிந்தது, பெரிதளவில் உணர முடிந்தது.

“எப்பேர்ப்பட்ட துன்பமாக இருந்தாலும் அனைவரும் ஒன் றிணைந்து தோள்கொடுத்தால், துயரிலிருந்து மீண்டு வரலாம் என்பதை இந்த ஒரு நிகழ்வே உணர்த்துகிறது,” என்றார் ‘பியோன்ட் சோஷல் சர்விசஸ்’ அமைப்பில் பணிபுரியும் சமூக ஊழியர் திரு அபிஷேக் பஜாஜ், 26. கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக திரு அபிஷேக் கெபுன் பாரு வட்டாரத்தில் வாழும் வசதி குறைந்த குடும்பங்களுக்குச் சேவையாற்றி வருகிறார். ஓர் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 50 நிகழ்ச்சிகளை ‘பியோன்ட் சோஷல் சர்விசஸ்’ கெபுன் பாரு வட்டாரத்தில் குடியிருக்கும் இக் குடும்பங்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறது என்றும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் கிட்டத்தட்ட 20 குழந்தைகள் பங்கேற்பார்கள் என்றும் கூறினார் திரு அபிஷேக் பஜாஜ். இவ்வாண்டு ‘பியோன்ட் சோஷல் சர்விசஸ்’ அதன் 50ஆவது ஆண்டை கொண்டாடு கிறது. சுமார் 40 ஊழியர்கள் இருக்கும் இவ்வமைப்பு தீவு முழு வதும் உள்ள ஐந்து குடியிருப்பு வட்டாரங்களில் உதவி வழங்கு கிறது. அதில் கெபுன் பாருவும் ஒன்று. வசதி குறைந்த குழந்தைகள், இளையர்கள், குடும்பங்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாக்கித் தருவதும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களைச் சமாளித்து வாழ்வில் முன்னேற்றம் காண வைப்பதும் இவ்வமைப்பின் பிரதான நோக்கம். அமைப்பு பற்றிய மேல் விவரங்களுக்கும் தொண்டூழியம் செய்வதற்கு அல்லது நன்கொடை வழங்குவதற்கும் http://www.beyond.org.sg/ என்ற இணையத் தளத்தை நாடலாம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

லிட்டில் இந்தியாவில் உள்ள பழக்கடைகளில் டுரியான் பழத்தைக் காண்பதென்பது அரிதினும் அரிது. ஆனாலும், இந்தப் பழத்தை விரும்பிச் சாப்பிடும் இந்தியர்களில் பலர் சிரமமும் தூரமும் பாராது கேலாங், சைனாடவுன் பகுதிகளுக்குச் சென்று டுரியானை வாங்கி சுவைத்துக்கொண்டுதான் உள்ளனர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Jul 2019

தீவெங்கும் வீசும் டுரியான் வாசம்

அமைச்சர் ஈஸ்வடன் உரையாடும் திருமதி லலிதா வைத்தியநாதன். வலது, அவரது இசை அமைப்புக் குறிப்பு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Jul 2019

ஆவணத் திரட்டுக்கு ஆதரவு