தொடக்கநிலை மாணவருக்கு தமிழ்மொழித் திறன் போட்டிகள்

தெலுக் பிளாங்கா சமூக மன்றத்தின் இந்திய நற்பணிச் செயற் குழு, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக 34வது ஆண்டாக தமிழ்மொழித் திறன் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. போட்டிகளுக்கான முதல் சுற்றுகள், எண் 100 டெப்போ சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலய பன்னோக்கு மண்டபத்தில் ஆலய மேலாண்மைக் குழுவின் பேராதரவுடன் நடைபெறவுள்ளன. இம்மாதம் 26ஆம் தேதி தொடங்கி மார்ச் 3ஆம் தேதி வரை வெவ்வேறு தொடக்க நிலைகளுக்கான போட்டிகள் நடைபெறும். அனைத்துப் போட்டியாளர் களும் பிற்பகல் 1 மணிமுதல் ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயத்தின் ஐந்தாம் மாடியில் அமைந்துள்ள பலநோக்கு மண்டபத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இறுதிச் சுற்றுகள் அனைத்தும் மார்ச் மாதத்தின் இறுதி வாரத்தில் பிற்பகல் 1 மணி முதல் தெலுக் பிளாங்கா சமூக மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெறும். மேற்கூறப்பட்டுள்ள போட்டி களுக்கான விண்ணப்பப் படிவங் ள் அனைத்துத் தொடக்கப்பள்ளி முதல்வர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆலயம் தெரிவித்தது. பள்ளியால் நியமனம் செய்யப் பட்ட மாணவ / மாணவியரின் பெயர்கள் அடங்கிய பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மின்னஞ்சல் அல்லது தொலைப் பிரதி மூலமாக எதிர்வரும் 18ஆம் தேதிக்குள் தெலுக் பிளாங்கா சமூக மன்றத்திற்குக் கிடைக்குமாறு அனுப்பி வைக்குமாறு பள்ளி முதல்வர்கள் மற்றும் தமிழ் ஆசிரியர்களைத் தெலுக் பிளாங்கா சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கவிதை விழாவையொட்டி நேற்று சனிக்கிழமை காலை ஆர்ட்ஸ் ஹவுசில் நடைபெற்ற சங்கம் நிகழ்ச்சியில் ஆங்கிலம், மலாய், சீனம், தமிழ் மொழிக் கவிதைகள் குறித்த கலந்துரையாடலும் கவிதை வாசிப்பும் இடம்பெற்றது. படத்தில் நிகழ்ச்சியை வழிநடத்திய டாக்டர் அசார் இப்ராஹிமுடன் (இடமிருந்து இரண்டாவது) உரையாடும் பிற மொழிக் கவிஞர்களுடன் தமிழ் மொழிக் கவிஞர்கள் நெப்போலியன் (வலமிருந்து இரண்டாவது), க.து.மு.இக்பால் (வலக்கோடி). படங்கள்: சிங்கப்பூர் கவிதை விழா

21 Jul 2019

'மக்களைப் புரிந்துகொள்ள இலக்கியம்'

'மிஸ் இந்தியா சிங்கப்பூர்' விருதை 2005ஆம் ஆண்டு பெற்று, உள்ளூர் நடிகையாக வலம் வரும் திருமதி காயத்திரி இப்போட்டியின் ‘மிசஸ் சிங்கபோலிட்டன்’ பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளார். படம்:சிங்கபோலிட்டன் ஏற்பாட்டுக் குழு

21 Jul 2019

‘சிங்கபோலிட்டன்’ எனும் அழகு ராணி போட்டி

சமூகத்துக்கும் குடும்பத்துக்கும் ஆற்றிய பணிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட (அமர்ந்திருப்போரில் இடமிருந்து) திருமதிகள் கமலா சண்முகம், மாலதி, ஸ்வப்னஸ்ரீ ஆகியோருக்கு 'அன்னையர் திலகம்' விருதை நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் (நடுவில் நிற்பவர்) வழங்கினார்.
படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், செய்தி: யூசுப் ரஜித்

21 Jul 2019

அன்னையர் திலகம்