சிந்தையைத் தூண்டி சிரிப்புடன் தொடங்கிய புத்தாண்டு

ஆண்டின் முதல் நாளான புத்தாண்டு அன்று நடைபெற்ற சிறப்பான இலக்கிய பேருரை அனைவரையும் கவரும் வண்ணம் அமைந்திருந்தது. குறுகிய காலப் பயணம் மேற் கொண்டு சிங்கப்பூர் வந்துள்ள தொலைக்காட்சி, பட்டிமன்றப் புகழ் நகைச்சுவைப் பேச்சாளர் திரு தேவகோட்டை இராமநாதன், “வாழ்க நிரந்தரம்” எனும் தலைப் பில் இலக்கியப் பேருரையை ஆற் றினார். தமிழ் வாழ்த்துக்குப் பிறகு அண்மையில் காலமான பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர், தமிழறிஞர் முனைவர் க.ப.அறவாணன் ஆகியோரின் மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன் நிகழ்ச்சியின் வர வேற்புரையை ஆற்றினார்.

இச்சிறப்பு இலக்கியப் பேருரை புத்தாண்டின் முதல் இலக்கிய நிகழ்ச்சி என்றும் இதனைத் தமிழர் பேரவை, தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெரியார் சமூக சேவை மன்றம், ஜமால் முகமது கல்லூரி முன் னாள் மாணவர் சங்கம் ஆகிய ஐந்து அமைப்புகளும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன என்றும் குறிப்பிட்டார் திரு ஆண்டியப்பன். சிங்கப்பூர் அமைப்புகளின் ஒற் றுமைக்கு இது ஒரு சான்று என்பதை வலியுறுத்திக் கூறினார். இதனைத் தொடர்ந்து தமிழர் பேரவையின் தலைவர் திரு வெ. பாண்டியன் முனைவர் தேவகோட்டை இராமநாதனுக்குச் சிறப்புச் செய்தார். அதன் பிறகு இடம்பெற்ற இலக்கியப் பேருரையில் திருவள்ளுவர், ஒளவையார், கம்பர், பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன் உள்ளிட்ட தமிழ் ஆளுமைகளைத் தொட்டு திரு இராமநாதன் சிறப்பானதோர் உரையை ஆற்றினார்.

சில நூற்றாண்டுகளில் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் கண்டு பிடிப்புகள் பற்றி நமது மூதாதையர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுதி வைத்துள்ளதாக அவர் பல மேற் கோள்களுடன் விளக்கினார். தமிழ் நிரந்தரமாக வாழும் என்று தாம் நம்புவதால் “வாழ்க நிரந்தரம்” எனும் தலைப்பைக் கொடுத்ததாக அவர் தெரிவித்தார். நிகழ்ச்சிக்குத் திரளாக வந்து கலந்துகொண்ட இலக்கிய ஆர் வலர்களும் தமிழன்பர்களும் முனைவர் தேவகோட்டை இராம நாதனின் நகைச்சுவை கலந்த உரையைக் கேட்டு இன்புற்றனர், ரசித்தனர். நிகழ்ச்சி நெறியாளராகப் பணி யாற்றிய எழுத்தாளர் கழகத்தின் செயலாளர் திரு சுப. அருணாசலம் நன்றியுறையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.