கதைக்களத்தில் எழுத்தாளர் இந்திரஜித்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற் குழுவும் இணைந்து ஒவ்வொரு மாதமும் நடத்தும் கதைக்களம் நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். நிகழ்ச்சியில் எழுத்தாளர் இந்திரஜித் சிறுகதை குறித்து சிறப்புரை ஆற்ற உள்ளார். சிறுகதை எழுதப் பயிற்சி யளிக்கும் விதத்தில் நடத்தப்படும் ’கதைக்களம்’ நிகழ்ச்சியில் தொடக்கப்பள்ளி மாணவர் முதல் கல்லூரி மாணவர் வரை அனைவருக்கும் போட்டிகளில் கலந்துகொள்ள வாய்ப்பு.

சிறுகதைகளின் கூறுகளை சக எழுத்தாளர்களுடனும் வாச கர்களுடனும் கலந்துரையாடலாம். பிப்ரவரி சிறுகதை, சிறுகதை விமர்சனப் போட்டிகளுக்கு 25.1.2019 வெள்ளிக்கிழமைக்குள் 250 முதல் 300 வார்த்தைகளுக்குள் படைப்புகளை கணினியில் அச்சிட்டு kathaikalam.astw@ gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும். ரொக்கப் பரிசுகளும் புத்தகப் பரிசுகளும் உண்டு. நிகழ்ச்சி 21, குளோஸ்டர் சாலையில் (GLOUCESTER ROAD) அமைந்துள்ள ’பெக் கியோ’ சமூக மன்றத்தின் 3ஆவது தளத்தில் நடைபெறும் மேல்விவரங்களுக்கு: www. singaporetamilwriters.com/ kathaikalam/ திருமதி கிருத்திகா, சி.த.எ.க. துணைச் செயலாளர் மின்னஞ்சல்: kiruthikavirku@gmail.com