‘மூன்று வழிகளில் சமூகத்திற்குப் பங்காற்றலாம்’

சிங்கப்பூர் இந்திய சமூகத்துடன் செயல்படுவது, அதையும் தாண்டி சிங்கப்பூர் சமூகத்திற்குப் பங்காற்றுவது, மாறிவரும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப இளையர்களுக்கும் மூத்த குடிமக்களுக்கும் தொழில்நுட்ப ஆற்றல்களைக் கற்றுக்கொடுப்பது என அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சிங்கப்பூர் சமூகத் திற்குப் பங்காற்றலாம் என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளாக உறுப்பினர்களுக்கும் சமூகத்திற்கும் சிறப்பான பங்கை ஆற்றிவரும் சங்கம், தொழில்நுட்ப ஆற்றலை மேம்படுத்த பணியாற்ற வேண்டும் என்றும் சங்கத்தின் அடுத்த கட்டத்திற்கு இதுதான் அடித்தளம் என்றும் அமைச்சர் கூறினார். தொழில்நுட்பத் துறையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் நன்மதிப்பைப் பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் கள் சங்கத்தின் சிங்கப்பூர் கிளை தமது 20ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சமூக சேவையை முன்னிறுத்திய கொண்டாட்டத்தைச் சென்ற ஞாயிற்றுக் கிழமை நடத்தியது. அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர் கள், சமூகத் தலைவர்கள் என ஏறத்தாழ 300 பேர் கூடியிருந்த கல்சா அரங்கில் சிறப்பு விருந் தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் ஈஸ்வரன், உரையாற்றி னார்.