பக்தர்களுக்குப் பயன் அளித்த சுகாதார விழா

கடந்த ஞாயிற்றுகிழமை ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் முதல் முறையாக நடைபெற்ற சுகாதார விழாவில் கிட்டத்தட்ட 1-00 பக்தர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர். கூ டெக் புவாட் மருத்துவ மனையோடு இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மருத்துவப் பரிசோதனையோடு ஆரோக்கியத்தை ஒட்டிய விரிவு ரையும் கேள்வி பதில் அங்கமும் நடைபெற்றன. எலும்பியல் மருத்துவர் டாக்டர் சாத்தப்பனும் முதியோர் மருத்து வத்துக்கான நிபுணர் டாக்டர் வித்யா தர்‌ஷினி பிள்ளையும் சிறப்புரைகள் ஆற்றி கேள்வி பதில் அங்கத்திலும் கலந்துகொண் டனர். “மேலும் அதிக இந்திய அமைப்புகள் இது போன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்பது இந்த விழாவின் முக்கிய நோக்கம். உதவி தேவைப்படுபவர்களுடன் நமது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள மிகுந்த ஆர்வம் கொண் டுள்ளோம்,” என்றார் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் தலைவர் திரு என். ஆனந்தராஜா.

செய்தி: எஸ். வெங்கடேஷ்வரன்

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘எஸ்ஜிஇந்து’ எனும் மின்னிலக்கத் தளத்தை உருவாக்கிய இளையர்கள் சிவானந்த் ராய் (வலது), ஜனார்த்தனன் கிருஷ்ணசாமி. 
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Apr 2019

இந்துக்களுக்காக மின்னிலக்க ஒன்றுகூடல் தளம்

தமிழ்மொழி விழாவை முன்னிட்டு மாதவி இலக்கிய மன்றம் ஏற்பாட்டில் இம்மாதம் 7ஆம் தேதியன்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த ‘தமிழர் திருநாள்’ விழாவில் அழகு நடனம் படைத்த சிறார்கள்.
படம்: நாதன் போட்டோ & வீடியோ ஸ்டூடியோ

14 Apr 2019

முத்தமிழ் மணம்  பரப்பிய தமிழர் திருநாள்