மகாகவி பாரதியாரைக் கௌரவித்த கலைநிகழ்ச்சி

எஸ். வெங்கடேஷ்வரன்

மகாகவி பாரதியாரின் நினைவு நாளையொட்டி, ஸ்ரீ நாராயண மிஷனில் வசிப்போருக்காக பாரதியார் இயற்றிய சில பாடல்களுக்குப் பாட்டு பாடியும் அபிநயம் பிடித்தும் கலாமஞ்சரி அமைப்பினர் கலைநிகழ்ச்சி ஒன்றைப் படைத்தனர். கடந்த மாதம் 29ஆம் தேதி ஸ்ரீ நாராயண மிஷனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 22 கலைஞர்கள் பங்கேற்று 11 பாடல்களையும் மூன்று நடன நிகழ்ச்சிகளையும் படைத்தனர். கலைஞர்கள், இல்லக் குடி யிருப்பாளர்கள் உட்பட மொத்தம் ஏறத்தாழ 80 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். “இங்கு வசிப்பவர்கள், பாரதியாரின் பாடல்கள் மற்றும் நடனத்தைக் கண்டு மகிழ்ந் தனர். அவர்கள் இருக்கும் இடத்திலேயே, அவர்களுக்காக இந்நிகழ்சியைப் படைத்த கலாமஞ்சரி அமைப்பினருக்கு எங்களுடைய நன்றி,” என்றார் ஸ்ரீ நாராயண மிஷனின் தலைமை நிர்வாக அதிகாரி திரு எஸ். தேவேந்திரன்.