உறவுக்குக் கம்பத்துப் பொங்கல்; ஒற்றுமைக்குத் தமிழர் திருநாள்

அடுக்குமாடி வீட்டு சமையல் அறைக்குள் 'பொங்கலோ பொங்கல்' என்று சொல் லும் காலம் இன்று. கம்பத்து வீட்டிற்கு வெளியே கூட்டாகப் பொங்கல் வைத்த காலம் அன்று. எளிய வாழ்க்கை முறை, கூட்டாக பொங்கல் வைப்பது, அக்கம்பக்க வீட்டினர், உற்றார், உறவினருடன் ஒரு வருக்கொருவர் வாழ்த்துச் சொல்லி பாரம் பரிய விளையாட்டுகளில் ஈடுபடுவது என சிங்கப்பூரில் ஓர் அழகிய பொற்காலமாக விளங்கியது அந்தக் கால கம்பத்துப் பொங்கல் பண்டிகை. சமூக அமைப்பில் நிர்வாகியாக பணி புரியும் 66 வயது திரு கா.சுப்பிரமணியம், கடந்த 1970களில் புக்கிட் தீமா பகுதி கம்பத்தில் வசித்தவர். "சூரியன் உதிக்கும் நேரம் பார்த்து பொங்கல் வைத்து பிறகு சடுகுடு போன்ற பாரம்பரிய இந்திய விளையாட்டுகளில் ஈடுபட்டது எனது இளம் பருவத்தை ஆனந்தமாக்கியது. உறி அடிக்கும் போட்டி, பொங்கல் மண் பானையில் சாயம் பூசுதல், காற்பந்துப் போட்டி என பல்வேறு போட்டிகளில் சமூகத்தினர் பங்கெடுத்தார் கள்," என்று அவர் நினைவு கூர்ந்தார்.

தோட்டத்திலேயே கிடைக்கும் திருவிழாக் கோலமாக கொண்டாடப் பட்ட பொங்கல் பண்டிகை அடுக்குமாடி வீட்டுப் பேட்டைகளுக்கு வந்ததும் அதன் மெளசு குறைந்துவிட்டதாக உணர்கிறார். சிங்கப்பூர் டர்ஃப் கிளப் குடியிருப்பில் வசித்த திருமதி ஜி. லீலாவுக்கு, நெய், அரிசி, பால், உலர் திராட்சை என அடிப்படையான பொருட்களைக் கொண்டு பொங்கல் வைத்த 1960களின் நினைவு இப்போது மனதில் எழுந்தது. எளிமையான ஆனால் மகிழ்ச்சியான வாழ்க்கைச் சூழல் அது என்று கூறிய 65 வயது லீலா, பொங்கல் நாளில் சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கான அவசியம் அரிதே என் றார். அந்தக் குடியிருப்பு ஊழியர்களுக்கு ஒதுக்கப்படும் தரை வீட்டின் முன்புறத்தை யும் பின்புறத்தையும் அலங்கரிக்கும் கரும்புகள், அவர்களது வீட்டுத் தோட்டத்தில் இருந்தே கிடைக்கும்.

இஞ்சிக் கொத்து, மஞ்சள் கொத்து, வீட்டின் வாசலில் கட்டும் மா இலை, படையலுக்குத் தேவையான வாழைப்பழம் சமையலுக்குத் தேவைப்படும் புதினா போன்றவற்றைச் சொந்தமாகவே வளர்க்க முடியும். அண்டை வீட்டாருடன் இவற்றைப் பகிர்ந்துகொள்ளும் கம்பத்து உணர்வும் அப்போது அதிகம்.

பொங்கலுக்கு வாங்கப்படும் மண் பானை பொங்கலுக்கு மட்டுமின்றி அடுத்த பொங்கல் வரை சமையலுக்குப் பயன் படுத்தப்படும். வீட்டில் ஏழு சகோதர, சகோதரிகளுடன் கூட்டாகக் கொண்டாடு வது போல் வருமா?" என்று சொல்லி இவரது மனம் ஏங்கியது.

இதுபோன்ற ஏக்கம் தமிழ் தொலைக் காட்சி நடப்பு விவகார செய்திப் பிரிவின் முன்னாள் தலைவரான 70 வயது திரு எம். கார்மேகம் மனதிலும் உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!