உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் பொங்கல் குதூகலம்

இவ்வாண்டு பொங்கல் திரு­நாளைக் கொண்டாட உட்­லண்ட்ஸ் வட்டாரத்தைச் சேர்ந்த சுமார் 500 பேர் ஒன்று­திரண்டனர். அவர்களை வர­வேற்கும் விதமாக தோர­ணங்கள், வாழை மரங்கள், கரும்பு, மாவிலைகள் ஆகியவை பாரம்பரிய அலங்காரங்களாகக் காட்சியளித்தன.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, கலாசாரப் படைப்புகள் அரங்கேற்றப்பட்டதுடன் பங்கேற்­பாளர்கள் பாரம்பரிய பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.
உள்துறை, சுகாதார அமைச்சு­களின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தி­னராகக் கலந்து­கொண்டார்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டுத் தலைவர்களான திரு ஜாஃபர் சாதிக்கும் திரு கருணா ரகு­பதியும் இந்தியச் சமூகத்தின் துடிப்பாற்றலை வெகுவாகப் பாராட்டினர். இந்தியப் பாரம்பரியம் வாழையடி வாழையாக தழைத்து வாழவேண்டும் என்றும் அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுடன் உள்துறை, சுகாதார அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் (நடுவில்). 
படம்: உட்லண்ட்ஸ் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு
2019-01-27 06:10:00 +0800

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

'மிஸ் இந்தியா சிங்கப்பூர்' விருதை 2005ஆம் ஆண்டு பெற்று, உள்ளூர் நடிகையாக வலம் வரும் திருமதி காயத்திரி இப்போட்டியின் ‘மிசஸ் சிங்கபோலிட்டன்’ பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளார். படம்:சிங்கபோலிட்டன் ஏற்பாட்டுக் குழு

21 Jul 2019

‘சிங்கபோலிட்டன்’ எனும் அழகு ராணி போட்டி

சமூகத்துக்கும் குடும்பத்துக்கும் ஆற்றிய பணிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட (அமர்ந்திருப்போரில் இடமிருந்து) திருமதிகள் கமலா சண்முகம், மாலதி, ஸ்வப்னஸ்ரீ ஆகியோருக்கு 'அன்னையர் திலகம்' விருதை நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் (நடுவில் நிற்பவர்) வழங்கினார்.
படம்: தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், செய்தி: யூசுப் ரஜித்

21 Jul 2019

அன்னையர் திலகம்

கடந்த மூன்று மாதங்களில் டன்லப் ஸ்திரீட்டின் மையப்பகுதியில் மட்டும் மூன்று கடைகள் மூடப்பட்டுவிட்டன. இந்த வட்டாரத்தில் பல ஆண்டுகளாகத் தொழில்செய்யும் வர்த்தகர்கள், இதற்குமுன் இப்படி ஒரு நிலை ஏற்பட்டதில்லை என்று சொல்லி ஆதங்கப்பட்டனர். படம்: இர்ஷாத் முஹம்மது

21 Jul 2019

கவலையில் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள்