தமிழுக்கும் தமிழருக்கும்  தொண்டாற்றிய இருநூற்றவர்

ஜனவரி 27ஆம் தேதியன்று நடந்த கருத்தரங்கில் பத்து பேச்சாளர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்தனர். பேராசிரியர் அ.வீரமணி, திருமதி மாலதி, திருமதி மல்லிகா, திருமதி ரோசினா ஆகியோர் இந்த ஆய்வுகளையும் விளக்கக்காட்சிகளையும் குறித்த கருத்துகளை முன்வைத்தனர். 30 பேர் இந்நிகழ்ச்சியின் கருத்து பரிமாற்றங்களில் பங்கேற்று, படைப்பாளர்களின் சிந்தனைகளைத் தூண்டினர். படங்கள்: சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றம்

சிங்கப்பூரின் இருநூறாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சிங்கப்பூரில் தமிழ் மொழி, தமிழ் மக்கள் மேம்பாட் டுக்கும் சிறப்புக்கும் பங்காற்றியவர் கள் பற்றிய ‘சிங்கப்பூர் தமிழர் இருநூற்றவர்’ என்ற தொகுப்பு நூலை  சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றத்தினர் தொகுத்து வருகின்றனர்.
“சிங்கப்பூர் தமிழ், தமிழர் வரலாற்றைப் பற்றிப் பேசும்போது  தலைவர்களைப் பற்றியே எல்லாரும் பேசுகிறோம். ஆனால், தமிழ் மக் களின் நல்வாழ்வுக்காகவும் இந்த நாட்டில் தமிழ் மொழியின் நிலைத் தன்மைக்காவும் நூற்றுக்கணக் கான சாதாரண மக்களும் தொண் டர்களும் தங்கள் வாழ்வையே தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்களில் பலர் இரவு நேரத்தில் வேலை பார்த்து பகலெல்லாம் சமூகப் பணியாற்றினர். பாதுகாவல ராக பணிபுரிந்தனர். அவர்கள் நினைத்திருந்தால் அரசாங்கப் பணிகளில் சேர்ந்து தங்கள் வாழ்க்கையை உயர்த்தியிருக்க லாம். பெரும்பாலானவர்கள் தங்கள் உயர்வைவிட சமூகப்பணியே முக்கியம் என நினைத்தனர். அவர்கள் தங்களைப் பற்றி எழுதி வைக்கவில்லை. எனவே, அவர் களைப் பற்றிய வரலாற்றுப் பதிவு முக்கியம்,” என்று தெரிவித்தார்  இத்தொகுப்பை வழிநடத்தும் பேராசிரியர் அ.வீரமணி.
“இந்த நூலில் அத்தகைய தொண்டர்கள் பலர் இடம்பெறுகிறார் கள். இருநூற்றவரில் நிச்சயம் தலைவர்களும் உண்டு,” என்றும் அவர் சொன்னார். 
“தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் பங்காற்றிய இவர்கள் தமிழர்களாக இருக்க வேண்டியதில்லை.
“எடுத்துக்காட்டாக, கொடை வள்ளலான லீ கொங் சியன், லீ அறநிறுவனம் வழி  தமிழுக்கும் தமிழருக்கும் ஏராளமான தொகை கொடுத்திருக்கிறார்.  
“முன்னாள் அதிபர் சி.வி.தேவன் நாயரை மலையாளி என்று ஒதுக்க முடியாது. 1977ல் தமிழுக்கு அவர் அளித்த அரசியல் அந்தஸ்து தமிழ் மொழி பெற்றுள்ள உயர்நிலைக்கு ஒரு முக்கிய காரணம்.
“அதேபோல், தெலுங்கரான கோ.சாரங்கபாணி ஆற்றிய பணிகள் எல்லாரும் அறிந்தது,” என்றும் குறிப்பிட்டார் திரு வீரமணி.
சிங்கப்பூர் தொழிற்சங்க இயக் கத்துக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் மலாயா கணபதி, அவர் வழியில் வந்த இரணியன், வீரசேனன் போன்றவர்களும் இத் தொகுப்பில் இடம்பெறுவார்கள என்று குறிப்பிட்ட அவர், முதல் தொகுதியில் சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்திற்கும் தமிழுக்கும் பங்காற்றிய அனைவரையும் உள்ளடக்குவது இயலாது என்றார்.
பல நூறு தொண்டர்களால் உருவானது சிங்கப்பூர் தமிழ்ச் சமூகமும் அதன் உயர்வும் என்பதால் இதுபோல் ஐந்து தொகுதிகளை  வெளியிடும் திட்டமுள்ளதாக திரு வீரமணி கூறினார்.
இந்தத் தொகுப்புக்காக மாணவர்கள் முதல் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், உயர்பணிகளில் இருப்பவர்கள் வரை பலரும் விவரங்களைச் சேகரித்து வரு கின்றனர். அவர்கள் தங்களது ஆய்வு விவரங்களை பொதுக்கருத்தரங்கில் படைப்பார்கள். 
ஜனவரி 6ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 10ஆம் தேதி வரை, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இக்கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. அப்போது, அவர்களது ஆய்வு குறித்து விவாதிக்கப்படும்.
“இவ்வாறு, கட்டுரைகளைப் படைப்பது, அதை எழுதுபவர்களுக்கு ஆர்வமூட்டும். அத்துடன் தவறுகளை முன்கூட்டியே திருத்திக்கொள்ள முடியும். சேர்க்க வேண்டிய விவரங்களைச் சேர்க்க முடியும்,” என்று தெரிவித்த கருத்தரங்கு தொடரின் ஒருங்கிணைப்பாளரான திருமதி மாலதி பாலா, 54, இந்தக் கருத்தரங்குகளுக்கு பலரும் கலந்துகொண்டு பங்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
“விஷயம் தெரிந்த சமூகத்தின் கல்வியாளர்கள், தலைவர்கள் போன்றவர்கள் எழுதுபவர்களுக்கு ஊக்கமளித்து, விவரங்களை வழங்க வேண்டும். மக்களைப் பற்றி மக்களே பதிவுசெய்யும் ஒரு சமூகக்கூட்டு முயற்சி இது,” என்று கூறினார் பேராசிரியர் வீரமணி. 
இக்கருத்தரங்கின் ஐந்தாம் தொடர் இன்று ஞாயிற்றுக்கிழமை  (10.2.2019) சிம் லிம் ஸ்குவேர், எண் #06-09 உள்ள சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்ற பணி மனையில் நடைபெறும். காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும் கருத் தரங்கு பற்றிய மேல்விவரங் களுக்குத் தொடர்பு கொள்க: 91440047