இந்தியரின் சுகாதார விழிப்புணர்வை அலசிய பட்டிமன்றம்

இன்றைய சுகாதார அம்சங்களில் இந்திய சமூகத்தினர் விழிப்புணர்வு பெற்றுள்ளனரா என்பதை அலசி யது ஜாலான் புசார், கம்போங் கிளாம் சமூக மன்றங்களின் இந்தியர் நற்பணி செயற்குழுக்கள் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் கொண்டாட்ட பட்டிமன்றம்.
மக்கள் கழக நற்பணிப் பேரவையின் ஆதரவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'ஆனந்தப் பொங்கல்' கொண்டாட்டம் சென்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திரு ஜோதி. மாணிக்கவாசகம் வழிநடத்திய பட்டிமன்றத்தில் திருமதி அகிலா ஹரிஹரன், திரு அ முஹம்மது பிலால், திருமதி ஸ்வர்ணலதா ஆவுடையப்பன் ஆகியோர் 'விழிப்புணர்வு பெற்றுள் ளனர்' என உதாரணங்களை முன்வைத்து வாதிட்டனர்.
'விழிப்புணர்வு பெறவில்லை' என வாதிட்ட அணியில் திருமதி சாந்தி காளிதாஸ், கவிஞர் அ. பரீஜ் முஹம்மது, திரு தயாநிதி ராஜகோபாலன் ஆகியோர் எதிர்க் கருத்துகளை கூறினர்.
கலகலப்பான பட்டிமன்றத்தில் இரு அணிகளின் விவாதங்களை யும் அலசி பல்வேறு கருத்துகளைக் கூறிய நடுவர் திரு ஜோதி. மாணிக்கவாசகம் இந்திய சமூகத் தினர் இன்றைய சுகாதார அம்சங் களில் விழிப்புணர்வு இன்னமும் முழுமையாகப் பெறவில்லை எனத் தீர்ப்பளித்தார்.
சிறப்பு பட்டிமன்றத்தை முஸ்லிம் லீக் (சிங்கப்பூர்) சமூக நல்லிணக்க சேவை அமைப்பின் மொழி-இலக்கியப் பிரிவான இளம்பிறை இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்திருந்தது.
பொங்கல் சமைக்கும் போட்டி, கோலப்போட்டி, சிறார்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டி, உறி அடித்தல், கரும்பு முறித்தல் போன்ற நிகழ்வுகளுடன் ஆடல் பாடல் கொண்டாட்டம் என நாள் முழுவதும் நிகழ்ச்சிகள் நடை பெற்றன.
நிகழ்வின் சிறப்பு விருந்தின ரான மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்ற மேயரும் ஜாலான் புசார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமதி டெனிஸ் புவா நிகழ்ச்சி படைப் பாளர்களுக்கு நினைவுப்பரிசுகளை வழங்கினார்.
பல இனங்களையும் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!