உபின் தீவில் கவிமணம்

உபின் தீவில் கவிமணம்

1 mins read
2c014ffc-b8ef-4f48-80b1-f8cf0a152781
உபின் தீவில் கவிபாடி மகிழ்ந்த கவிஞர்கள். செய்தி, படம்: இன்பா -

சீனப்புத்தாண்டு விடுமுறையை ஒட்டி சென்ற செவ்வாய்க்கிழமை அன்று கவிமாலை அமைப்பு பேருந்து கவிமாலைக்கு ஏற்பாடு செய்திருந்தது. தமிழ் ஆர்வலர்களையும் கவிஞர்களையும் ஒன்றிணைத்து ஃபேரர் பார்க் ரயில் நிலையத்திற்கு அருகிலிருந்து பேருந்தில் புறப் பட்டு, சாங்கி படகு முனையத் திற்குச் சென்று அங்கிருந்து படகில் புலாவ் உபின் தீவிற்குச் சென்றடைந்தனர். கவிமாலையின் நிறுவனர் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ தலைமையில் கவிஞர்கள் ராஜூ ரமேஷ், இன்பா, சேவகன், பனசை நடராஜன் ஆகியோர் கவிதையும் தமிழ்ச்சுவையும் மணக்க மணக்க ஒரு நாள் முழு வதற்கும் கலகலப்பான அங்கங் களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். திடீர் தலைப்புக்குக் கவிதை எழுதுதல், திடீர் பட்டிமன்றம், பாட்டுக்குப் பாட்டு, இலக்கிய வினா விடை, குழு விளையாட்டுப் போட்டிகள், பரிசளிப்பு போன்ற சிறப்பு அங்கங்களில் கவிஞர்கள் பங்கேற்று மகிழ்ந்தனர். மேலும் கவிமாலையின் வழக்க மான நிகழ்வுகளான படித்த, பிடித்த கவிதைகள், சென்ற மாதப் போட்டிக் கவிதை களுக்குப் பரிசளிப்பு போன்ற பல்சுவை அங்கங்களுடன் ஒரு நாள் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.