மக்கள் கவிஞர் மன்றம்: புதிய செயலவை

மறைந்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் சீரிய கருத்துகளை சமூகத்தில் பரப்பும் நோக்குடன் கடந்த 14 ஆண்டுகளாக சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் மக்கள் கவிஞர் மன்றம், கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற 15வது ஆண்டு கூட்டத்தில் புதிய செயலவையைத் தேர்ந்தெடுத்தது. தலைவராக திருமதி புவனேஷ்வரி மகேந்திரன், துணைத் தலைவர்களாக திரு பி. நாகராஜன், பாத்தேறல் இளமாறன், செயலாளராக திரு ஆர். இராமசாமி, துணைச் செயலாளராக திரு வி. இராஜாராம், பொருளாளராக திரு கே.என். பாலசுப்பிரமணியன், துணைப் பொருளாளராக திரு ஜி. இளங்கோவன்,    செயற்குழு உறுப்பினர்களாக திருவாளர்கள் உத்திராபதி, எம். இரவிச்சந்திரன், வி. இராமசாமி, எஸ்.  கோவிந்தராஜன், எஸ், தாமோதரன், எஸ். கல்யாண்குமார், ஜே. கருணாகரன் ஆகியோர் தேர்வுபெற்றனர்.