வரவுசெலவுத் திட்டம் 2019: மனந்திறந்து பேசிய இந்தியர்கள்

வரவுசெலவுத் திட் டம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்ட இந்தியர்கள், அடித்தளத் தலைவர்கள் ஆகியோர் தெரிவிக்கும் கருத்து கள், அக்கறைகள் ஆகியவற்றை உன்னிப் பாகக் கவனிக்கும் மூத்த துணை அமைச் சர் டாக்டர் மாலிக்கி ஒஸ்மான். படம்: சிக்லாப் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு

கிழக்கு வட்டாரத்தில் வசிக்கும் இந்திய குடியிருப்பாளர்கள் இவ் வாண்டுக்கான வரவுசெலவுத் திட் டம் குறித்த கலந்துரையாடல் ஒன் றில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இந்தக் கலந்துரையாடலை தற் காப்பு, வெளியுறவு மூத்த துணை அமைச்சரும் தென்கிழக்கு வட்டார மேயருமான டாக்டர் மாலிக்கி ஒஸ் மான் ஏற்று நடத்தினார். ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி, ஃபெங்ஷான் தனித் தொகுதி இந் தியர் நற்பணிச் செயற்குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கலந் துரையாடல் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சிக்லாப் சமூக நிலையத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலில் நாற்பது இந்திய குடியிருப்பாளர்களும் அடித்தளத் தலைவர்களும் கலந்து கொண்டனர். இருநூற்றாண்டு நிறைவு போனஸ், சேவைத் துறையின் சார்ந்திருப்போர் விகித வரம்பு, மெர்டேக்கா தலைமுறைத் தொகுப் புத் திட்டம், சமூக சுகாதார உத வித் திட்டம் போன்றவை பற்றி குடியிருப்பாளர்கள் கலந்துரையா டினர்.