இ.எஸ்.ஜே சந்திரனுடன் கலந்துரையாடல்

சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் கடந்த மாதம் 17ஆம் தேதியன்று ‘திரு இ.எஸ்.ஜே. சந்திரனுடன் கலந்துரையாடல்’ எனும் நிகழ்ச்சியை நடத்தியது.

இந்திய மரபுடைமை நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட உள்ளூர் கலைஞர்கள் கலந்துகொண்ட னர்.  

சிங்கப்பூர் தொலைக்காட்சியில் முன்பு மூத்த நிர்வாகத் தயாரிப்பாளராகவும் தமிழ்ப் பிரிவுத் தலைவராகவும் இருந்தார் திரு சந்திரன். 

ரசிகர்களை ஈர்ப்பதற்குத் தாம் மேற்கொண்ட தயாரிப்பு உத்திகளை அவர் எடுத்துரைத்தார். தாம் சந்தித்த சவால்கள் பற்றி அவர் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார். 

அன்று தம்மோடு இணைந்து பணியாற்றிய கலைஞர்கள் சந்தித்த சவால்கள், அவர்களுக்குத் தரப்பட்ட வேடங்களைத் தாம் தேர்ந்தெடுத்த விதம் பற்றியும் பகிர்ந்துகொண்டார். 

நிகழ்ச்சிக்கு வந்திருந்த பழம்பெரும் உள்ளூர் நடிகர்களான ஜெயராம், நாராயணசாமி, குணசீலன் போன்றோரும் திரு சந்திரனின் இயக்கத்தில் தாங்கள் நடித்த மேடை, தொலைக்காட்சி நாடகங்களின்போது நடந்த சுவையான சம்பவங்களை நினைவுகூர்ந்தனர்.

சங்கத்தின் விதிமுறைகளையும் கோட்பாடுகளையும் எழுதியவர் திரு சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

லிட்டில் இந்தியாவில் உள்ள பழக்கடைகளில் டுரியான் பழத்தைக் காண்பதென்பது அரிதினும் அரிது. ஆனாலும், இந்தப் பழத்தை விரும்பிச் சாப்பிடும் இந்தியர்களில் பலர் சிரமமும் தூரமும் பாராது கேலாங், சைனாடவுன் பகுதிகளுக்குச் சென்று டுரியானை வாங்கி சுவைத்துக்கொண்டுதான் உள்ளனர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Jul 2019

தீவெங்கும் வீசும் டுரியான் வாசம்

அமைச்சர் ஈஸ்வடன் உரையாடும் திருமதி லலிதா வைத்தியநாதன். வலது, அவரது இசை அமைப்புக் குறிப்பு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Jul 2019

ஆவணத் திரட்டுக்கு ஆதரவு