மூத்தோருக்கான சீனப் புத்தாண்டு கொண்டாட்டம்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் மூத்தோரை மகிழ் விப்பதற்கான சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம் கடந்த சனிக் கிழமையன்று நடைபெற்றது. 
தஞ்சோங் பகார் குழுத் தொகுதியைச் சேர்ந்த ஏறத்தாழ 100 மூத்தோர் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.
தஞ்சோங் பகார் மூத்தோர் நல அலுவலகமும் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலும் இணைந்து ஏற்பாடு செய்த கொண்டாட்டத்தில் தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் பெரேரா  சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
ஆலயத்தின் நிர்வாகக் குழு தலைவர் திரு முத்தையா வரவேற்புரையாற்றினார்.
மூத்தோருக்கு மதிய உணவைத் தொண்டுழியர்கள் பரிமாறிய பிறகு அவர்களை மகிழ்விக்கும் வண்ணம் பிரபல சீனப் புத்தாண்டுப் பாடல்களும் கலாசார நடனங்களும் நடை பெற்றன. மூத்தோர்களுக்கு ஹங்பாவ் மற்றும் அன்பளிப்புப் பைகள் கோயில் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்பட்டது.  
தொண்டுழியர்கள் பலர் சேர்ந்து நிகழ்ச்சியை வழிநடத்தி மூத்தோரை மகிழ்வித்தனர்.