உயர்நிலைப்பள்ளி கல்வி முறை மாற்றம் 

சகோதரத்துவம், குடும்ப உணர்வு, புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை போன்ற நற்பண்புகளை மாணவர்களிடையே வளர்க்கும் தன்மை இந்தப் புதிய உயர்நிலைப்பள்ளி கல்வி முறைக்கு உண்டு என்று நம்புகிறார் பூன் லே உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலை மூன்றில் பயிலும் வினோத்குமார் சுப்பிரமணியன். 
பூன் லே உயர்நிலைப் பள்ளியில் காலை நேரக் கூட்டத்தின்போது மாணவர்கள் இணைப்பாட நடவ டிக்கைகள் அடிப்படையில் குழுக் களாகப் பிரிக்கப்படுகின்றனர். 
இதன் மூலம் விரைவு நிலை, வழக்கநிலை (ஏட்டுக்கல்வி), வழக்கநிலை (தொழில்நுட்பம்) என்ற வேறுபாடின்றி அனைத்து மாணவர்களும் ஒன்றுசேர வாய்ப்புக் கிடைப்பதுடன் ஒருவருக் கொருவர் உதவி வருவதாக கூறினார் அறிவியல் ஆசிரியரான திரு தினேஷ்குமார்.

ஆசிரியை திருமதி ‌‌ஷாலினி தனக்கொடி, இவ்வாறு மாணவர் கள் இணைப்பாட நடவடிக்கைகள் மூலம் இணைவது ஏற்றத்தாழ்வு இல்லாத பள்ளி வாழ்க்கைப் பயணத்தை மாணவர்களிடம் ஏற் படுத்துவதுடன் நற்பண்புகளையும் வலியுறுத்துவதாகக் கூறினார்.
“இதனால் மாணவர்களிடையே அபாரமான முன்னேற்றங்களை நான் கண்டுள்ளேன். இணைப்பாட நடவடிக்கையின் அடிப்படையில் பிரிக்கப்படுவதால் மாணவர்கள் ஒரு குடும்பமாக இயங்குகின்றனர்,” என்றார் திருமதி ஷாலினி.

மாணவர்கள் வெவ்வேறு நிலைகளில் பாடங்களைப் படிக்கும் முன்னோடித் திட்டத்தில் பூன் லே உயர்நிலைப்பள்ளியும் இடம்பெற்று உள்ளது.  
வழக்கநிலை ஏட்டுக்கல்விப் பிரிவைச் சேர்ந்த வினோத்குமார், கணக்குப் பாடங்களுக்கு மட்டும் விரைவுநிலை வகுப்புகளுக்குச் சென்று வருகிறார்.
“சக மாணவர்களுக்கிடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படுகின்றது. மாணவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகப் பழகுவதால் விரைவு நிலை வகுப்பில் என்னால் தாழ்வு மனப்பான்மையின்றி படிக்க முடிகி றது,” என்று கூறிய வினோத்குமார், பண்பு நலன்களுக்கு முக்கியத்து வம் அளிக்கும் இத்திட்டம் வர வேற்கத்தக்கது என்றும் கருத்து தெரிவித்தார்.