விழி இழந்தோருக்கு நிதி திரட்டும் நூல் வெளியீடு  

சிங்கப்பூர் பார்வை குறைபாடுடை யோர் சங்கத்திற்காக நிதி திரட் டும் நூல் வெளியீடு இம்மாதம் இரண்டாம் தேதி மாலை தேசிய நூலகத்தில் நடந்தேறியது. 
எழுத்தாளர் திரு யூசுப் ராவுத்தர் ரஜித் எழுதிய ‘வண்டி யும் ஒருநாள் ஓடத்திலேறும்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் ‘தனிமரம் தோப்பாகும்’ என்ற கவிதைத் தொகுப்பும் வெளியீடு கண்டன. 
செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர் சிறப்பு விருந்தின ராக இதில் கலந்துகொண்டார். 
சிங்கப்பூர் பார்வை குறை பாடுடையோர் சங்கத்தின் நிர் வாக இயக்குநர் திரு ஆண்டோ இயோவுடன் பார்வைகுறைபாடு டைய மூன்று உறுப்பினர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 
நிகழ்ச்சியில் பேராசிரியர் முனைவர் திரு சுப. திண்ணப்பன், தொழில் முனைவர் மற்றும் வளர் தமிழ் இயக்கத்தின் துணைச் செயலாளரான திருமதி விஜி ஜெகதீஷ், தமிழகத்தில் இருந்து வருகை தந்த கவிஞர், எழுத் தாளர் உதையை மு. வீரையன் ஆகியோர் தமது கருத்துரை களை வழங்கினர். 
தொடர்ந்து நூல்களை வெளி யிட்டு அதில் வரும் நிதியைத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப் போவதாக உறுதியளித் தார் திரு ரஜித்.   
“எனக்குப் பின் வளரும் என் தலைமுறை பொதுத் தொண்டில் ஈடுபட்டு நாட்டின் வளர்ச்சிக்குத் தங்களால் முடிந்த பணிகளைச் செய்யவேண்டும் என்று ஊக்க மளிப்பது இந்த நிகழ்வின் முக் கிய நோக்கம்,” என்று மேலும் கூறினார் திரு ரஜித். 
திரு விக்ரம் நாயர் நூல்களை வெளியிட்டு நூல்களை சமூகத் தலைவர்கள் உட்பட வந்திருந்த அனைவருக்கும் வழங்கினார்.

 

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கவிஞர் முருகடியானுக்கு (வலமிருந்து நான்காவது) இவ்வாண்டின் கணையாழி விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான நியமன நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது இர்ஷாத்திடமிருந்து விருதைப் பெறுகிறார் முருகடியானின் துணைவியார். படத்தில் இடமிருந்து: வளர்தமிழ் இயக்கத் தலைவர் ஆர்.ராஜாராம், முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.தினகரன், திரைப்படப் பாடலாசிரியர் சிநேகன். (வலக்கோடியில்) கவிமாலை அமைப்பின் தலைவர் இறைமதியழகன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 May 2019

கவிமாலையின் ‘கவிதையும் கானமும்’