தேசிய நூலகத்தின் புத்தகப் படையினர், புத்தக நிஞ்சாக்கள்

அனைத்து வயதினருக்கும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் தேசிய நூலக வாரியத்தின் தமிழ் மொழிச் சேவைப் பிரிவு, பள்ளி மாணவர்களுக்காகப் புத்தகப் படையினர், புத்தக நிஞ்சாக்கள் என்ற இரண்டு நிகழ்ச்சிகளைக் கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். 
புத்தகப் படையினர் குழு 7 முதல் 10 வயது மாணவர்களை இலக்காக​க் கொண்டது. மூன்று வயது முதல் ஆறு வயது வரையுள்ள மாணவர்களுக்காக புத்தக நிஞ்சாக்கள். மாணவர் களிடையே தமிழ்மொழியைச் சுவாரசியமான முறையில் கற்றுக் கொ​டுப்பதும் தமிழார்வத்தை வளர்ப்பதும் இக்குழுக்களின் நோக்கம். சிண்டாவால் பயிற்று விக்கப்பட்ட ஆசிரியர்கள் இந்தக் குழுக்களை வழிநடத்துகின்றனர். 
2015ஆம் ஆண்டு தொடங்கிய புத்தகப் படையினர் குழுவின் பாடத்திட்டம் இவ்வாண்டு புதுப் பிக்கப்பட்டுள்ளது. 
அங்​ மோ கியோ பொது நூலகம், பிடோக் பொது நூலகம், ஜூரோங் பொது நூலகம், குவீன்​ஸ்டவுன் பொது நூலகம், உட்லண்ட்ஸ் வட்டார நூலகம் ஆகிய ஐந்து இடங்களில் இந்தக் குழு கூடுகிறது. 
சனிக்கிழமைகளில் காலை ஒரு மணி நேரத்திற்கு இந்த நிகழ்ச்சி இடம்பெறுகிறது. இம்மாதம் 9ஆம் தேதி தொடங்கிய இந்த ஐந்து குழுக்களும் அடுத்த மாதம் 27ஆம் தேதி வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் கூடும்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பாய லேபார் ஆகாயப் படை தளத்தில் காணப்படும் மேஜர் ஆறுமுகம் சிவராஜ், 32. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

16 Jun 2019

தேசிய தின அணிவகுப்பில் போர் விமானி மேஜர் ஆறுமுகம்

‘எ குட் ஸ்பேஸ்’ அமைப்பின் வகுப்பறையில் நடைபெறும் ஆங்கிலப் பாட வகுப்பை குமாரி அ.ஆர்த்தி, குமாரி வைஷ்ணவி நாயுடு (நடுவில்) ஆகியோர் வழிநடத்துகின்றனர். படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், வெங்கடேஷ்வரன், வுமன் ஆஃப் சக்தி

16 Jun 2019

சக்தி கொடுக்கும் ‘சக்தி’