சிங்கப்பூரில் முழுநீள நகைச்சுவை நிகழ்ச்சி

2 mins read
7116bbea-92bf-4227-8430-e3ed9c4a803d
-

கவலைகளை மறந்து நகைச்சுவை மழையில் மக்களை நனைய வைக்க விஜய் 'டிவி' தொலைக்காட்சியின் 'கலக்கப் போவது யாரு' நகைச்சுவை நிகழ்ச்சியில் அசத்தும் பல பிரபலங்கள் சிங்கப்பூர் வரவிருக் கின்றனர். சிங்கப்பூர் தமிழர்கள் அனைவரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்க வருகிறது அடுத்த மாதம் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள இந்த 'சிரிக்கப் போகுது சிங்கப்பூர்' நகைச்சுவை நிகழ்ச்சி. இந்த முழுநீள நகைச்சுவை நிகழ்ச்சியைப் படைக்க விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா, நகைச்சுவைக் கலைஞர்கள் 'தாடி' பாலாஜி, ஈரோடு மகேஷ், சதீஷ் குமார், அஸார், வடிவேல் பாலாஜி, அறந்தாங்கி நிஷா என்று ஒரு நட்சத்திரப் பட்டாளமே இங்கு படையெடுத்து வருகிறது. இந்நிகழ்ச்சியை விளம்பரப் படுத்த 'தாடி' பாலாஜி, ஈரோடு மகேஷ், சதீஷ் குமார் ஆகிய மூவரும் அண்மையில் சிங்கப்பூர் வந்திருந்தனர். சரியான நேரத்தில் மக்களை ஈர்க்கும் வகையில் நகைச் சுவையில் அசத்தும் ஈரோடு மகேஷ் சிங்கப்பூர் மக்களிடையே தாம் பார்த்து ஆச்சரியப்பட்ட விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டார். "கலைஞர்கள் வெளிப்படுத் தும் நகைச்சுவையை ஆத்மார்த்த மாக ரசிக்கக்கூடிய தன்மை சிங்கப்பூரர்களுக்கு உண்டு. நிகழ்ச்சிகளில் இடம்பெறும் நகைச்சுவையை அவர்கள் நினைவுவைத்து எங்களை மிகுந்த அன்புடன் வரவேற் கின்றனர்," என்று தமிழ் முரசிடம் தெரிவித்தார் ஈரோடு மகேஷ். சிங்கப்பூரின் 'அப்போலோ செல்லப்பாஸ்' வழங்கும் இந்த நான்கு மணி நேர நகைச்சுவை நிகழ்ச்சி ஏப்ரல் 14ஆம் தேதி 'ஸெப்@பிக்பாக்ஸ்' (Zepp@Bigbox) அரங்கில் மாலை ஆறு மணிக்குத் தொடங்கும். நிகழ்ச்சிக்கான நுழைவுச் சீட்டுகளை லிட்டில் இந்தியாவில் உள்ள அப்போலோ செல்லப்பாஸ், 68/69 சிராங்கூன் சாலையில் இருக்கும் அபிராமி ஜூவல் லர்ஸ், புக்கிட் பாத்தோக் புளோக் 283, ஈசூன் ஜீவி மால், சீமெயில் உள்ள ஈஸ்ட் பாயிண்ட் கடைத்தொகுதி, புளோக் 308 ஆங்கர்வேல் சாலை ஆகிய இடங்களில் இருக்கும் ஸ்ரீ முருகன் டிரேடிங், 31, பேராக் சாலையில் உள்ள நோவா ஹாலிடேஸ் ஆகிய இடங்களில் வாங்கலாம். இணையத்தின் வழி நுழைவுச் சீட்டுகளை வாங்க showtickets.asia எனும் இணையப்பக்கத் திற்குச் செல்லலாம். நுழைவுச்சீட்டுகளுக்கான விலை $20, $30, மற்றும் $40. மேல் விவரங்களுக்கு 8876 1044 எனும் தொலைபேசி எண் ணுடன் தொடர்புகொள்ளலாம்.