சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டை பறைசாற்றும் அறிவுசார் இயக்கம்

சிங்கப்பூரின் தமிழ்ப் பண்பாட்டைத் தமிழர்களும் தமிழர் அல்லா தோரும் புரிந்துகொள்வதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் ஏது வான முயற்சிகளை முன்னெ டுக்கும் நோக்கில் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது.

பல இன மக்கள் வாழும் சிங்கப்பூரில் பல பண்பாடுகளுக்கு இடையில் ஒரு பாலமாக இந்த அமைப்பு செயல்படவிருக்கின்றது. “தமிழ்ப் பண்பாட்டைத் தமிழர் அல்லாதவரிடத்திலும் பிறரின் பண்பாடுகளைத் தமிழரிடத்திலும் கொண்டு சேர்ப்பது இந்த அமைப்பின் முக்கிய பணிகளில் ஒன்று,” என்று கூறினார் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இயக்குநர் திரு அருண் மகிழ்நன்.

“சமூகப் பற்றுமிக்க சிங்கப்பூரர் கள் இந்த மெய்நிகர் அமைப்பை உருவாக்கியுள்ளனர். பெரும் பாலும் 40 வயதுக்குள்ளான 25 பேருடன் இந்த அமைப்பு தொடங் கப்பட்டுள்ளது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் சனிக்கிழமை தேசிய நூலக வாரியக் கட்டடத் தில் நடந்த புதிய அமைப்பின் நிகழ்வில் அமைப்பின் நிலைப்பாடு, செயல்பாடுகள் குறித்த கேள்வி கள் எழுந்தன.

தமிழ் மொழி நிலைத்திருக்க உணர்வுபூர்வமான முயற்சிகளு டன் அறிவுசார்ந்த முயற்சிகளும் தேவை என்று கூறிய முனைவர் சுப.திண்ணப்பன், அறிவுசார் நிலையில் தொடங்கப்பட்டுள்ளதை வரவேற்றார். அனைத்துத் தரப்பி னருடனும் அமைப்பு இணைந்து செயலாற்றும் என்று திரு அருண் கூறினார்.

புதிய அமைப்பு பண்பாட்டுறவு, வெளியீடு, ஆய்வாடல் ஆகிய மூன்று பிரிவுகளாக தனது செயல்பாடுகளை வகுத்துள்ளது. ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழிகளிலும் மையம் செயல்படும்.

தமிழ்ப் பண்பாடு தொடர்பான கையேடுகள், ஆய்வுக்கட்டுரை கள், நூல்கள் போன்றவற்றை மின்வடிவில் வெளியிட வெளி யீட்டுப் பிரிவு நோக்கம் கொண் டுள்ளது. சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தினர் எதிர்கொள்ளும் முக்கிய பண்பாட்டுப் பிரச்சினை களை ஆய்வுகளின் அடிப்ப டையில் கலந்து ஆராயவும் தகுந்த பரிந்துரைகள் கிடைக்கும் பட்சத்தில் அவற்றைப் பொருத்த மான அரசு நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளவும் ஆய்வாடல் பிரிவு முனையும். புதிய அமைப்பு பற்றிய மேல் விவரங்களை https://www. singaporetamil.org/ எனும் இணையப்பக்கத்தில் பார்க்கலாம்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon