சமூக நல்லிணக்கம் வளர்க்க குடும்ப தினம்

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத் தின் சிங்கப்பூர் கிளை கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் 9வது முறையாக தமது குடும்ப தின விழாவைக் கொண்டாடியது. சிங்கப்பூரின் சமூக ஒற்றுமை யையும் நல்லிணக்கத்தையும் பறை சாற்றும் வகையில் இந்த நிகழ்வில் பல சமயங்களைச் சேர்ந்த இந்தியர்கள் ஈடுபட்டனர். மாணவர்களுக்கான விளை யாட்டுப் போட்டிகள், புதிர் போட்டிகள், வண்ணம் தீட்டும் போட்டி, இல்லத்தரசிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், பெரி யவர்களுக்கான போட்டிகள், அதிர்ஷ்டக்குலுக்கு போன்றவை விழாவில் இடம்பெற்றன. குடும்பத்துடன் குடும்ப தினத்தில் பங்கேற்று மகிழ்ந்த முன்னாள் மாணவர் சங்கத்தினர் படம்: ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம்