முதுமையிலும் புதுமை படைக்கும் மூத்தோர்

புத்தாக்க இந்தியக் கலையகம் இம்மாதம் 16ஆம் தேதி அன்று வழங்கிய முதியோருக்கான கணினி அறிமுகப் பயிற்சியில் 15 முதியோர் பங்கேற்றனர். கணினி முதல் திறன்பேசி வரை அவற்றை சார்ந்த முக்கிய தகவல்கள், நேரடிப் பகிர்வும் கலந் துரையாடலும் மூலம் கற்றுத்தரப் பட்டன. ஃபேஸ்புக் போன்ற அன்றாட சமூக ஊடக பயன்பாடு, வாழ்வை செம்மைபடுத்தும் செயலி கள், மருத்துவம், உணவு, குடும்பத்துடன் ஒருங்கிணைப்பு, கணினி வழி உரையாடல் போன்ற வற்றை முதியோருக்கு கற்றுத் தரும் செயல்திட்டங்களும் விளக் கப்பட்டன. தமிழில் நடத்தப்பட்ட இப்பயிற்சி யில் இணையத்தில் கடவுச்சொல் பாதுகாப்பாக அமைக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தைத் தெரிந்துகொண்டதாக பங்கேற்ற வர்கள் தெரிவித்தனர். பங்கேற்றவர்கள் இணையத்தில் உண்மைச் செய்திகள் அறிவதன் இன்றியமையாமை, இணைய புரளிகளால் ஏற்படும் பாதகங்கள் ஆகியவை பற்றி அறிந்து கொண்டனர். எளிய முறையில் காணொளி களை உருவாக்கவும் ஒலி வடிவங்களைத் தயாரிக்கவும் இந்தப் பயிலரங்கில் சொல்லித் தரப் பட்டன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon