மலேசியாவில் நடைபெற்ற உலகத் திருக்குறள் மாநாடு

இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மொரி‌ஷியஸ், ஐக்கிய அரபு சிற்றரசுகள் போன்ற நாடுகளிலிருந்து 300க்கும் மேற் பட்ட பேராளர்கள் பங்கேற்ற அனைத்துலக திருக்குறள் மாநாடு பிப்ரவரி 22ஆம் தேதி முதல் மார்ச் 4ஆம் தேதி வரை மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டின் சிறப்பு அம்ச மாக 1,000 கிலோ கிராம் எடை யுள்ள திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. ‘போர்ட் டிக்சன்’ நாடாளுமன்ற உறுப்பினரும் பிகேஆர் கட்சியின் தலைவருமான அன்வார் இப்ராஹிம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இந்த நிகழ்ச்சி யைத் தொடக்கி வைத்தார்.

தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக் கட்டளையும் மலாயா பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து நடத்திய இந்த மாநாட்டில் சிங்கப்பூரிலிருந்து 35 பேராளர்கள் கலந்துகொண்டனர். மாநாட்டில் பேராசிரியர் முனைவர் மு. கருணாநிதிக்கும் சிங்கப்பூர் தமிழ் இலக்கிய வளர்ச் சிக்காக பாடுபட்டுவரும் தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் மு.ஹரிகிருஷ்ணனுக்கும் ‘தமிழ்க் காவலர்’ விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். நிறைவு விழாவில் பல்வேறு தமிழறிஞர்களுக்கும் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளுக்கும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமை சங்கத்தின் (லிஷா) இலக்கிய மன்றத்திற்கு ‘சிறந்த தமிழ்ச் சங்க அமைப்பு’ விருது வழங்கப்பட்டது. மாநாட்டில் ஏறக்குறைய 105 ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கப் பட்டன. சிங்கப்பூர் தரப்பிலிருந்து ஐந்து ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வாளர்கள் வாசித்தனர்.