தனியே விடப்படும் குழந்தைகள்  எதிர்நோக்கக்கூடிய ஆபத்துகள்

வீட்டில் குழந்தைகளைத் தனியாக விட்டுச் செல்வதில் மிகவும் ஆபத்தானது குழந்தை உடல் காயங்களுக்கு ஆளாவதுதான். ஓடியாடி விளையாடும் குழந்தை கீழே விழுந்து, காயம்படக்கூடும். மேலும், சன்னல் வழியாக கீழே விழுந்து மரணம் நிகழ வாய்ப்புள்ளது. இதில், எவ்வளவு நேரம் குழந்தை தனியாக இருந்தது என்பது பொருட்டல்ல ஏனெனில், ஓர் அசம்பாவிதம் நடக்க சில நிமிடங்களே போதுமானது என்று கூறினார் புரொமிசஸ் (வின்ஸ்லோ) மருந்தகத்தின் மூத்த மனநல மருத்துவ டாக்டர் ஜேக்கப் ராஜேஷ்.

தனியாக இருக்கும் குழந்தையின் மனநிலை
சிறு குழந்தைகள் தனியாக இருக்கிறோம் என்பதை உணர்ந்ததும் உடனடியாக மிகுந்த பதற்றம் அடைகின்றனர். 
குறிப்பாக, தூக்கத்திலிருந்து எழும் குழந்தைகள், தெரிந்தவர் யாரும் அருகில் இல்லை என்பதை உணரும்போது மிகுந்த பயமடைவார்கள். 

தனியாக விடப்படும் அல்லது கண்காணிக்கப்படாத பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்பு
தனித்து விடப்படும் குழந்தை உணர்வு பூர்வமாகவும் மனரீதியாகவும் பாதிப்படையக் கூடும். இதை அனுபவிக்கும் குழந்தை அளவுக்கு மீறி மற்றவரை சார்ந்திருக்கும் போக்கிற்கு ஆளாகலாம். 
பயத்தினால் அவர்கள் கோபத்தை வெளிப்படுத்தலாம். திடீர் திடீரென கண்கலங்கலாம்.

குழந்தைகள் மறந்துவிடுவார்கள்
குழந்தைகளுக்கு நினைவுகள் ஆழப்பதி வதில்லை, அவர்கள் சம்பவங்களை எளிதில் மறந்துவிடுவார்கள். எனவே, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொண்டால் இத்தகைய நிகழ்வுகளை மறந்து வழக்கத்திற்குத் திரும்பலாம். 
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வழிகள்
பெற்றோர், குறிப்பாக தாயாரின் பங்கு இதில் முக்கியமானது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கும்படி பெற்றோர் குழந்தை களுக்கு உறுதிப்படுத்த  வேண்டும்.
அந்த சம்பவத்தை நினைவுபடுத்து வதைத் தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் இதுவரையில் ஈடுபட்ட வழக்கமான நடவடிக்கைகளைத் தொடர அனுமதிக்க வேண்டும். 
இத்தகைய சம்பவங்கள் நிகழும்போது, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நண்பரின் வீடு, குழந்தைப் பராமரிப்பு  நிலையம் போன்ற புதிய சூழலை உடனடியாக அறிமுகம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். 

பாதிப்படைந்த குழந்தை மீண்டு வருவதற்கு ஆகும் காலம்
பாதிப்படைந்த குழந்தைகள் மீண்டு வருவதற்கு ஒரு குறிப்பிட்ட காலத்தை எளிதில் கணித்துச் சொல்ல முடியாது.
ஒவ்வொரு குழந்தைக்கும் இது மாறுபடும். 
குழந்தையின் மனப்போக்கு, பிரச்சினை களை அக்குழந்தை எதிர் கொள்ளும் திறன், சம்பவத்திற்கு பின் குழந்தையைப் பராமரிப்ப வர்களின் செயல்கள் போன்றவற்றைப் பொறுத்து குழந்தை எவ்வளவு விரைவில் மீண்டு வருகிறது என்பது அமையும். 
கசப்பான அனுபவத்திலிருந்து மீள் வதற்கு முதலில், குழந்தையின் வாழ்வில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பது முக்கியம். 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon