வாழ்க்கையில் ஏதோ ஒரு காலக் கட்டத்தில் தனக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமையைப் பெண் கதாபாத்திரங்கள் வழி மிகத் தத் ரூபமாகப் படம்பிடித்துக் காட்டியது 'காடசஸ் அஃப் வேர்ட்ஸ்' என்னும் மேடை நாடகம். இப்படைப்பு இந்தியாவின் 'நைட்டிங்கேல்' என்று அழைக்கப் பட்ட சரோஜினி நாயுடுவின் பாலியல் பலாத்காரம் தொடர்பிலான படைப்புகளின் தாக்கத்தில் உரு வாகியது. இம்மாதம் மார்ச் 21 முதல் 24ஆம் தேதி வரை ஐந்து முறை மேடையேற்றப்பட்டது இப்படைப்பு. இதில் பெண் கதாபாத்திரங்கள் வழி பாலியல் கொடுமை அனு பவித்ததன் தவிப்பையும் அதி லிருந்து மீண்டு வந்ததையும் மிகத் தத்ரூபமாக மூன்று நடிகை கள் தங்கள் நடிப்பில் வெளிக் காட்டினர். படைப்பைக் காணத் திரண்ட கிட்டத்தட்ட 300 பேர் முன்னிலை யில் ரெபெக்கா சங்கீதா துரை, பிரமிளா கிருஷ்ணசாமி, மும்தாஸ் மரிக்கார் ஆகிய மூன்று கலைஞர் களும் திறம்பட நடித்தனர். "ஆங்கில மேடைப்படைப்பு களில் இந்திய பெண் கலைஞர்கள் குறைவாகவே உள்ளனர். அதனால் இந்திய பெண் கலைஞர்களை மையமாக்கிய இந்தப் படைப்பை உருவாக்க இதுவே ஒரு முக்கிய காரணமாக இருந்தது," என்றார் இந்த நாடகத்தின் எழுத்தாளரும் இயக்குநருமான 42 வயது கிரேஸ் கலைச்செல்வி. ஆசிரியர், தொடக்கக் கல்லூரி மாணவி, சிறுமியாக இருந்தபோது பாதிப்புற்ற பதின்ம வயது இளையர் எனப் பல்வேறு கதாபாத்திரங்களில் மூன்று நடிகைகளும் வலம் வந் தனர். கிட்டத்தட்ட ஒரு மணிநேரத் திற்கு அரங்கேறிய நாடகத்தை அடுத்து 30 நிமிடங்கள் கலந் துரையாடல் அங்கமும் இடம் பெற்றது. அதில் பேசிய பெரும் பாலானோர் அவர்களின் வாழ்வில் ஏதோ ஒரு தருணத்தில் பாலியல் பலாத்காரத்தை அனுபவித்தனர் என்றும் அதைப் பொருட்படுத்தாமல் இருந்தாலும் சமுதாயத்தில் இது தினசரி வாழ்வில் நிகழும் வழக்க மான விஷயம் என்றும் விவரித்தார் திருவாட்டி கிரேஸ். நாடகத்தின் கருப்பொருள் பார்வையாளர்களில் ஒரு சிலரைப் பாதிப்பதாக அமைந்தால் ஒவ்வோர் அரங்கேற்றத்தின்போதும் கலந் துரையாட இரு ஆலோசகர்களும் இருந்தனர். "இந்த படைப்பை உருவாக்கும் வேளையில் பாலியல் பலாத்காரத் தால் அவதியுற்ற சிலரை நேரில் சந்தித்து பேசினேன். ஆகையால் உண்மை சம்பவங்கள் உட்பட ஆழமான உணர்ச்சிகளும் இந்த படைப்பில் வெளிப்படுத்தப்பட்டன," என்று தெரிவித்தார் மேடை நாடகத்தில் நீண்டகால அனுபவம் உள்ள திருவாட்டி கிரேஸ்.
பெண் கொடுமையைப் படம்பிடித்து காட்டிய நாடகம்
2 mins read
பாலியல் பலாத்காரம் தொடர்பில் அனுபவித்த கொடுமைகளை வெவ்வேறு பெண் கதாபாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்தினர் நாடகக் கலைஞர்கள். படம்: அடீப் ஃபாஸா -

