சிங்கப்பூரின் தமிழ்ப் பண்பாட்டைத் தமிழர்களும் தமிழர் அல்லாதோரும் புரிந்துகொள்வதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் ஏதுவான முயற்சிகளை முன்னெடுக்கும் நோக்கத்தோடு இவ்வாண்டு பிப்ரவரி மாதம் தோற்றுவிக்கப்பட்ட சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம், பல்வேறு புத்தாண்டுகளை ஆராயும் கருத்தரங்கு ஒன்றுக்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது. அதன் முதல் முயற்சியே பல் வேறு இனத்தவரையும் சென்று சேர வேண்டும் என்ற காரணத்தால் கருத்தரங்கு ஆங்கிலத்தில் நடை பெற்றது. தேசிய நூலக வாரியத் தின் 16வது தளத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வுக்குத் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவு ஆதரவளித் திருந்தது. "புத்தாண்டில் என்னதான் இருக்கிறது?" என்ற தலைப்பில் நான்கு கல்விமான்கள் உரையாற் றினர். ஆங்கிலப் புத்தாண்டு குறித்து முனைவர் ஜெஃப்ரி பெஞ்சமின் விளக்கமளித்தார். அதனைத் தொடர்ந்து முஸ்லிம் புத்தாண்டு குறித்துத் திரு முகமது இம்ரான் முகமது தாயீபும், சீனப்புத்தாண்டு பற்றி முனைவர் விவியன் வீயும் பேசினர். இறுதி யாகத் தமிழ்ப் புத்தாண்டு குறித்து உரையாற்றினார் முனைவர் சுரேஷ்குமார் முத்துக்குமரன். பல கலாசாரங்களைப் பிரதி பலிக்க, சூஜி கேக், நியான் காவ், எபோக் எபோக், நாகாசாரி ஜாகுங், பாயசம் ஆகியவை சிற் றுண்டிகளாகப் பரிமாறப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்துகொண்டோர் இந்தப் பல பண்பாட்டு உணவுப் படையலை வெகுவாக ரசித்தனர். "இரண்டு மணிநேரம் வியக்க வைக்கும் தகவல்களோடு நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்றது. குறிப்பாக, பல கலாசார உணவு, சிங்கப்பூரின் பல இனச் சூழ்நிலை யைப் பிரதிபலித்தது," என்று கருத்துரைத்தார் 55 வயது விரிவுரையாளரான திரு எஸ் தியாகராஜன். இந்த நிகழ்வுக்காகவே உரு வாக்கப்பட்ட 'புத்தாண்டு வாழ்த்துகள்' என்ற தமிழ்ப் பாடலை முனைவர் ராதிகா ஜெய்தேவும் செல்வி சாய் லலிதா ரவியும் நிகழ்ச்சியின் இறுதியில் பாடி மகிழ்வித்தனர். அந்தப் பாடலை எழுதி இசையமைத்திருந் தார் திரு யுகேந்திரன் வாசுதேவன். "ஆய்வுகளின் அடிப்படையில் அறிஞர்களை முன்வைத்து இந்த நிகழ்வை நடத்தினோம். தங்களுக்கு இதுவரை தெரியாத பல தகவல்களைப் பெற்றுக் கொண்டதாகப் பலரும் எங்க ளிடம் தெரிவித்தபோது மன நிறைவு கிடைத்தது. பண்பாடு களுக்கு இடையிலான புரிந் துணர்வை ஏற்படுத்துவதற்கு இது போன்ற சிறு முயற்சிகள் உதவு வதில் மகிழ்ச்சி," என்றார் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இயக்குநர் அருண் மகிழ்நன்.
புத்தாண்டுகளைப் பற்றி ஆராய்ந்த கருத்தரங்கு
2 mins read
தமிழர்கள், சீனர்கள், மலாய்க்காரர்கள் என சுமார் 150 பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனடைந்தனர். படம்: அர்பன் ஷட்டர்ஸ், செய்தி: சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் -

