ஏட்டில் மட்டுமல்ல, வீட்டிலும் தமிழ் வாழவேண்டும்

பள்ளியிலும் வேலையிடத்திலும் ஆங்கிலம் முதன்மை மொழியாகக் கருதப்படும் சிங்கப்பூரில் தமிழ் மொழியை அன்றாட வாழ்க்கையில் இயல்பாகவே பயன்படுத்தலாம் என்பதற்கு நல்லதோர் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறார் திரு மோகன்ராஜ், 52.
சாங்கி பொது மருத்துவமனை யில் அவசர சிகிச்சைப் பிரிவில் தாதியராக இவர் பணியாற்றுகிறார்.
அது தமிழ்மொழி சார்ந்த பணி இல்லை என்றாலும் தமிழ் மீது அதிக பற்றுகொண்டவர் இவர்.
சிகிச்சைக்காக வரும் தமிழர் களிடம் தமிழில் பேசும்போது அவர்கள் மனதளவில் இதமாக உணர்கிறார்கள் என்கிறார் இவர். தமிழரைச் சந்தித்தால் தமிழிலேயே பேசுவது இவரது இயல்பு.
தமிழ் தெரிந்தோரிடம் 'வாட்ஸ் அப்' செயலி வழியாக உரையாடும் போது அல்லது குறுஞ்செய்தி அனுப்பும்போது தமிழை மட்டும் பயன்படுத்துவதை இவர் வாடிக் கையாகக் கொண்டிருக்கிறார். அவர்கள் ஆங்கிலத்தில் உரையாடி னாலும் இவரது பதில் தமிழிலேயே இருக்கும். அவர்களில் ஒரு சில ருக்கு இது விநோதமாகத் தெரிந் தாலும் அப்பழக்கத்தை மாற்றிக் கொள்ள இவர் விரும்பவில்லை.
தம்முடைய மலேசிய நண்பர்கள் கைபேசி செயலி வழி தமிழில் தகவல்களை பகிர்ந்துகொள்வதால் இவரும் அதையே பின்பற்ற முடிவு செய்தார்.
"இன்று தமிழில் தகவல்களைச் செயலிவழி பகிர்ந்துகொள்ள முடி யும். ஆனாலும் நம்மில் பலர் தமிழ்மொழியில் தொடர்புகொள்ள முன்வருவதில்லை. நாமே நமது மொழியைப் பயன்படுத்தாவிடில் வேறு யார் அதை பயன்படுத்துவர்?" என்று வருத்தப்பட்ட திரு மோகன், இந்நிலை மாறவேண்டும் என விரும்புகிறார்.
ஃபேஸ்புக் சமூக ஊடகத்தில் இவரை 11,000க்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். தமிழ்மொழி, பண்பாடு, கலாசாரம் தொடர்பான சுவையான பல செய்திகளை இவர் அடிக்கடி பகிர்ந்துகொள்வதால் இவரது ஃபேஸ்புக் பக்கம் உள் நாட்டு, வெளிநாட்டு வாழ்த் தமிழர் கள் பலரையும் அது ஈர்த்துள்ளது.
திரு மோகனின் தமிழ்ப்பற்றுக்கு, இவரது புகைப்படம் எடுக்கும் பொழுதுபோக்குதான் அடிப்படைக் காரணம்.
திருமணத்திற்குப் பிறகே தமிழ் மீதான ஆர்வம் கூடியதாகக் கூறும் திரு மோகன், 1990களில் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்க் கழகம் போன்ற இந்திய அமைப்பு கள் நடத்தும் சமூக நிகழ்ச்சிகளில் புகைப்படங்கள் எடுக்க உதவி புரிந்தார்.

சமூக ஊடகங்கள் பிரபலமான அந்தத் தருணத்தில், நிகழ்ச்சிகள் குறித்த சிறு பதிவுகளை எழுதி, புகைப்படங்களுடன் தம் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றமும் செய்தார்.
இணைய இதழ்களிலும் உள்ளூர் தமிழ் இதழ்களிலும் இவரின் பங்க ளிப்பு அதிகரிக்க, பிழையின்றியும் தெளிந்த நடையிலும் தமிழை எழுதவேண்டும் எனக் கடப்பாடு கொண்டார். அந்த எண்ணம் ஈடேற, தமிழ் நூல்களை வாசிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டார்.
ஓய்வு நேரத்தில் தமிழ் நூல்கள் வாசிப்பது, தமிழ்ப் பண்பாடு தொடர்பான 'யூடியூப்' காணொளி கள் பார்ப்பது, தமிழில் பதிவுகளை ஃபேஸ்புக் பக்கத்தில் இடுவது, தமிழ் எழுத்துகளுடன் கூடிய படங்களை வடிவமைப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு இவர் நேரம் ஒதுக்குகிறார்.
'எதற்காக இதையெல்லாம் செய்கிறார்?' என இவரின் நடவ டிக்கைகள் குறித்துச் சிலர் கேலி செய்தது உண்டு. ஆனால் அதை எல்லாம் திரு மோகன் ஒருபோதும் பொருட்படுத்தவில்லை.
தமிழ்மொழியின் சிறப்புகளை பரப்புவதற்காக இவர் எடுத்து வரும் மின்னிலக்க முயற்சிகள் இவரை மலேசியா, மியன்மார், தமிழகம் போன்ற வெளிநாட்டு வாழ்த் தமிழர்களுடன் இணைத்து உள்ளன.
இவ்வாண்டு தொடக்கத்தில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழ கத்தில் தமது மின்னிலக்க பதிவுகள் பற்றி மாணவர்களிடம் பகிர்ந்துகொள்ள திரு மோகனுக்கு வாய்ப்புக் கிட்டியது. அதில், தமிழ் மொழியை வாழும் மொழியாக நிலைத்திருக்க வெளிநாட்டு வாழ்த் தமிழர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து இவர் உரையாற்றினார்.
அதோடு, சென்ற 2014ஆம் ஆண்டு மியன்மார் செல்வந்தர் ஒருவர் விடுத்த அழைப்பின் பேரில், அங்குள்ள இளையர்கள் மத்தியில் தன்முனைப்புச் சொற் பொழிவு ஆற்ற இவர் சென்றிருந் தார் என்பது குறிப்பிடத்தக்கது.
'தமிழ்மொழி விழா 2019'ஐ பிரபலப்படுத்தும் முயற்சியாக இளை யர்களை நேர்கண்டு, அந்தக் காணொளியை 'தூய தமிழ்ச் சொற்கள்' எனும் ஃபேஸ்புக் பக் கத்தில் இவர் பதிவேற்றம் செய்தார்.
இப்படி கணினி, இணையம் வாயிலாக தமிழ்மொழி தொடர்பான வி‌‌ஷயங்களைப் பகிர்ந்துகொள்ள தன்னார்வத்துடன் பல முயற்சி களை எடுத்து வரும் இவர், அவை இன்றைய இளையர்களைச் சென் றடைய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.
தமது இணையப் பதிவுகள் இளையர்களிடையே நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தி வருவ தாகக் கூறும் திரு மோகன், தம்மை ஒரு முன்மாதிரியாகக் கருதி, இளையர்கள் தமிழ் தொடர் பான எழுத்து, காணொளி, பதிவு களை உருவாக்கி, அவற்றைத் தங்களது சமூக ஊடகப் பக்கங் களில் பதிவேற்றம் செய்யும்போது அது தமக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தருவதாகக் குறிப்பிட்டார்.
"சிங்கப்பூரில் தமிழ் வாழும் மொழியாக நிலைத்திருக்க வீட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளிடம் தமிழில் பேச வேண்டும். தமிழ் மொழி மாதத்தோடு நின்றுவிடாது ஆண்டு முழுவதும் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய லாம். இதில் தமிழ் ஊடகங்களுக்கு அதிக பொறுப்புள்ளது. அவர்கள் தமிழ்மொழி, பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முன்வர வேண்டும்," என்றார் திரு மோகன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!