ரோகித் சர்மா: உலகக் கிண்ணத்துக்கான இந்திய அணி ஏறக்குறைய கண்டறியப்பட்டுவிட்டது

ரோகித் சர்மா: உலகக் கிண்ணத்துக்கான இந்திய அணி ஏறக்குறைய கண்டறியப்பட்டுவிட்டது

1 mins read

புதுடெல்லி: உலகக் கிண்ணத்துக் கான இந்திய அணி ஏறக்குறைய கண்டறியப்பட்டுவிட்டது என்று அந்த அணியின் துணை அணித் தலைவர் ரோகித் சர்மா தெரிவித் துள்ளார். 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே மாதம் 30ஆம் தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளும் இம்மாதம் 23ஆம் தேதிக்குள் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலைத் தெரிவிக்க வேண்டும். நியூசிலாந்து முதல் அணியாக 15 வீரர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப் படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்திய அணி ஏறக்குறைய கண்டறியப்பட்டு விட்டது எனத் துணை அணித் தலைவர் ரோகித் சர்மா தெரிவித் துள்ளார். இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ''ஏறக்குறைய இந்திய அணி கண்டறியப்பட்டு விட்டதாக நினைக்கிறேன். சில இடங்கள் மட்டுமே இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று எல்லோ ருக்கும் தெரியும்.