பெங்களூருவை வீழ்த்திய கோல்கத்தா

பெங்களூரு: பெங்களூருவில் நடைபெற்ற இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் ஆட்டத்தில் பெங்களூரு அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் வீழ்த்தியது.
பூவா தலையாவில் வென்ற கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதையடுத்து, பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் களாக பார்த்திவ் பட்டேல், விராத் கோஹ்லி ஆகியோர் இறங்கினர்.
அணியின் எண்ணிக்கை 64 ஆக இருக்கும்போது பார்த்திவ் பட்டேல் 25 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்து ஏபி டி வில்லியர்ஸ் களமிறங்கினார்.
விராத் கோஹ்லி, டி வில்லியர்ஸ் ஜோடி அதிரடி காட்டியது. கோல்கத்தா அணியினர் வீசிய பந்துகளை அவர்கள் சிக்சர்கள், பவுண்டரிகளாக விளாசினர்.
கோஹ்லி 49 பந்துகளில் 2 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 84 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டி வில்லியர்ஸ் 63 ஓட்டங்களுடன் வெளியேறி னார். பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ஓட்டங்களை எடுத்தது. அடுத்து பந்தடித்த கோல்கத்தா அணியில் சுனில் நரைன், ராபின் உத்தப்பா, கிறிஸ் லின், நிதிஷ் ராணா அணித் தலைவர் தினேஷ் கார்த்திக் ஆகியோர் சீரான இடைவெளியில் நடையைக் கட்டினர்.
அப்போது கோல்கத்தா அணிக்கு 3 ஓவர்களில் 53 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இந்த நெருக்கடியான கட்டத் தில் அடியெடுத்து வைத்த ஆண்ட்ரே ரசல், கோல்கத் தாவை வெற்றிப் பாதைக்குக் கொண்டு சென்றார். 18வது ஓவரில் 'ஹாட்ரிக்' சிக்சர் அடித்த ரசல், டிம் சௌத்தி வீசிய 19வது ஓவரில் 4 சிக்சர்களையும் ஒரு பவுண்டரி யையும் அடித்தார் கோல்கத்தா அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளுக்கு 206 ஓட்டங்கள் குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைச் சுவைத்தது. ரசல் 48 ஓட்டங்களுடன் ஆட்டமிழக் காமல் இருந்தார். கோல்கத்தா வுக்கு இது மூன்றாவது வெற்றியாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!