பட்டிமன்ற கலைக் கழகத்தின் 100வது பட்டிமன்றம்

பட்டிமன்ற கலைக் கழகத்தின் 100வது பட்டிமன்றம்

2 mins read

இம்மாதம் 20ஆம் தேதி, சனிக் கிழமை மாலை 6 மணியளவில் சுவா சூ காங், கியட் ஹோங் சமூக மன்றத்தின் இந்திய நற் பணிச் செயற்குழுவின் ஆதரவில் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 100வது நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 2006 ஜனவரியில் ஹெண்டர் சன் சமூக மன்ற இந்திய நற் பணிச் செயற்குழு, 'லிசா' என் கிற லிட்டில் இந்தியா வர்த்தகம் மற்றும் மரபுடைமைச் சங்கத்தின் ஆதரவில் சீனிவாசப் பெருமாள் கோயிலில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக தன் முதல் நிகழ்ச்சி யைக் கழகம் நடத்தியது. 'ஆங்கிலக் கலப்பில்லாத பேச்சுத் தமிழ் சாத்தியமா?' என்ற கருப் பொருளைக் கொண்ட இந்தப் பட்டிமன்றம் ஆங்கிலக் கலப்பில் லாமல் தமிழர்கள் பேச முயற்சிக்க வேண்டும் என்ற சிந்தனையை தமிழ்ச் சமூகத்துக்கு ஊட்டியது. புதுப்பிக்கப்படாத பழைய உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. 30க்கும் மேற்பட்ட நடுவர்கள், 200க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் கடந்த காலங்களில் நிகழ்ச்சி களில் பங்குபெற்றிருக்கிறார்கள். வருகிற 20ஆம் தேதி நடைபெறும் 100வது நிகழ்ச்சியில் கழகம் சிறப்பு மலரை வெளியிட இருக்கிறது. பல முக்கியத் தகவல்களுடன், இதுவரை நடைபெற்ற பட்டிமன்றங்களைப் பற்றிய தகவல்கள், முக்கிய புகைப்படங்கள் ஆகியன மலரில் இடம் பெற்றுள்ளன. 100வது நிகழ்ச்சியின் தலைப்பு 'மகிழ்ச்சி என்பது விரும்புவதைப் பெறுவதில் உள் ளதா? பெறுவதை விரும்புவதில் உள்ளதா?'. 'விரும்புவதைப் பெறுவதில்தான் உள்ளது' என்று வாதாடப் போகிறவர்கள் திரு ஜோதி. மாணிக்கவாசகம், ஆங் கிலோ சீனத் தன்னாட்சிப் பள்ளி மாணவர் சரவணன் கார்த்தி கேயன், திருமதி விஜி ஜெகதீஷ். 'பெறுவதை விரும்புவதில் உள்ளது' என்ற அணியில் வாதா டப் போகிறவர்கள் திருமதி அகிலா ஹரிஹரன், ராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப் பள்ளி யின் மாணவி விஷ்ணுவர்தினி ஆனந்தன், முனைவர் ராஜி சீனிவாசன். சர்வதேச வாழ்வியல் பயிற்று நர் டாக்டர் ஃபஜிலா ஆசாத் நிகழ்ச்சிக்கு நடுவராக இருப்பார். $5 நுழைவுக்கட்டணத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி சுவா சூ காங் எம்ஆர்டி நிலையத் துக்கு எதிரே அமைந்துள்ள கியட் ஹோங் சமூக மன்றத்தின் 5வது தளத்தில் இருக்கும் பல் நோக்கு மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு 100வது நிகழ்ச்சிக்கான சிறப்பு மலர் மற்றும் உணவு வழங்கப் படும். நுழைவுச் சீட்டுகளை திரு சாமி 96516772 (சுவா சூ காங் பகுதி) திருமதி அகிலா ஹரிஹரன் 93363964 (செங்காங் பகுதி) திரு ரஜித் 90016400 (தேக்கா பகுதி) ஆகியோரிடம் பெற்றுக் கொள்ளலாம்.