40 நாடுகளைச் சேர்ந்த 200 பெண்களின் சேலைச் சோலை 

சிங்கப்பூரின் 200வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக சிங்கப்பூர், இந்தியா உட்பட 40 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் பல்வேறு வண்ணங் களில், பல விதங்களில் சேலை உடுத்தி மத்திய வர்த்தக வட்டாரத்தைச் சேலைச் சோலை யாக்கினர்.
சிங்கப்பூரின் பன்முகத் தன்மை, பல கலாசாரம், வரலாறு ஆகியவற்றைக் கொண்டாடும் விதமாக ‘டெமூர் டிரேப்ஸ்’ எனும் சேலையைப் போற்றும் ஃபேஸ்புக் குழு இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. 
‘டெமூர் டிரேப்ஸ்’ குழுவை நிறுவிய ரூபி ஷேகர் சிங்கப்பூரில் கடந்த 23 ஆண்டுகளாக வசித்துவருகிறார். இங்கு வாழும் பெண்களை ஒன்றிணைத்து சிங்கப்பூரின் வளமான பாரம்பரியத் தைக் கொண்டாட இந்தியப் பாரம்பரிய உடையான சேலையைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறினார் 57 வயதான திருவாட்டி ஷேகர். 
தமது கருத்தை ஃபேஸ்புக்கில் பதிவேற்றியதற்கு பெண்களிட மிருந்து உற்சாக வரவேற்பு கிடைத்ததாகக் கூறினார் அவர்.
நிகழ்ச்சியில் ‘தோழமைத் திட்டம்’ செயல்படுத்தப்பட்டது. சேலை உடுத்தத் தெரியாத வெளிநாட்டுப் பெண் ஒவ்வொரு வரும் சேலை உடுத்தத் தெரிந்த ஓர் இந்தியப் பெண்ணுடன் நட்பு முறையில் சேர்க்கப்பட்டார்.
மார்ச் மாதம் 31ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இந்தியப் பெண்கள் தங்களுடன் தோழமைத் திட்டத்தில் இணைந்த பெண்களுக்கு சேலைகள் மட்டு மல்ல, நகைகளையும்கூட அளித்து, அணிவித்து அழகு பார்த்தனர். 
தனக்கு சேலை உடுத்தச் சொல்லிக்கொடுத்த திருவாட்டி சுஷ்மா தேவி தமக்கு சேலையை அன்புப் பரிசாக அளித்து விட்டதாகச் சொன்னார் இத்தாலி யரான திருவாட்டி டோனினெல்லி.  அவரது மகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
முதன்முறையாக சேலைகட்டிய ஐவரி கோஸ்ட்டைச் சேர்ந்த 35 வயது லிண்டா எபோக்லெ, சேலை  உடுத்துவது தமக்கு மிகவும் பிடித்திருப்பதாகக் குறிப்பிட்ட துடன், “மீண்டும் சேலை கட்டுவேன்,” என்றார்.
சிங்கப்பூர் ஆற்றங்கரையில் இருக்கும் ராஃபிள்ஸ் சிலை, ஆசிய நாகரிகங்கள் அரும் பொருளகம், ராஃபிள்ஸ் சிலைக்கு முன்பு, கெவெனா பாலம் (படம்:  ஜெ. தியன் ஃபோட்டோ) ஆகிய இடங்களில் பெண்கள் அனை வரும் ஒன்றாகக் கூடி புகைப் படங்கள் எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மரின் பரேட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இணைப் பேராசிரியர் ஃபாத்திமா லத்தீஃப், “இங்கு வசிக்கும் 40 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் சிங்கப்பூரின் 200வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவது ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு,” என்றார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘எஸ்ஜிஇந்து’ எனும் மின்னிலக்கத் தளத்தை உருவாக்கிய இளையர்கள் சிவானந்த் ராய் (வலது), ஜனார்த்தனன் கிருஷ்ணசாமி. 
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

14 Apr 2019

இந்துக்களுக்காக மின்னிலக்க ஒன்றுகூடல் தளம்

தமிழ்மொழி விழாவை முன்னிட்டு மாதவி இலக்கிய மன்றம் ஏற்பாட்டில் இம்மாதம் 7ஆம் தேதியன்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடந்த ‘தமிழர் திருநாள்’ விழாவில் அழகு நடனம் படைத்த சிறார்கள்.
படம்: நாதன் போட்டோ & வீடியோ ஸ்டூடியோ

14 Apr 2019

முத்தமிழ் மணம்  பரப்பிய தமிழர் திருநாள்