இந்துக்களுக்காக மின்னிலக்க ஒன்றுகூடல் தளம்

சமுதாயத்தில் நிலவி வரும் விவ காரங்கள் தொடர்பில் இந்திய சமூகத்தினர் தங்கள் கருத்து களைக் கூற ஒரு தளம் தேவை என்ற நோக்கத்துடன் இளை யர்கள் இருவர் 'எஸ்ஜிஇந்து' என்ற இணையத்தளத்தை தொடங்கி உள்ளனர்.
இணையத்தையும் சமூக ஊட கத்தையும் பயன்படுத்திப் பலர் தங்கள் எண்ணங்களைக் கூறத் தொடங்கிய காலகட்டத்தில் இந்து சமயத்தைப் பற்றி வெளிநாட்டில் வாழ்ந்து வரும் மற்ற இனத்தவர்கள் பல பொய்த் தகவல்கள் பரப்பி வந்ததை அப்போது சிங்கப்பூர் நிர்வாக பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த சிவானந்த் ராய் உணர்ந்தார்.
தற்போது செயற்கை நுண்ண றிவு நிறுவனத்தில் நிர்வாகியாகப் பணிபுரியும் சிவானந்த், 29, தம் பல்கலைக்கழக நண்பர் ஜனார்த் தனன் கிருஷ்ணசாமியுடன் இணைந்து இப்பிரச்சினையைக் களைய முற்பட்டார்.
"பல சமய வழிபாட்டால் நம் சடங்குகளைப் பழிப்பதுடன் நம்மை மூடநம்பிக்கையுடையவர்கள் என் றும் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் என்றும் சிலர் கூறுவதுண்டு. சிறு பான்மை இனத்தவராக இது நம் மைப் புண்படுத்துவண்டு," என் றார் சிவானந்த்.
முக்கிய இந்து சமய விழாக் களை ஏற்பாடு செய்துவரும் இந்து அறக்கட்டளை வாரியம், சமூக ஊடகத் தளங்கள் வைத்திருந் தாலும் அது பெரும்பாலும் நிர்வா கப் பணிகளிலேயே ஈடுபட்டு வரு கிறது. நாட்டின் இந்து சமய, நன் கொடை விவகாரங்கள் தொடர்பில் வாரியம் கவனம் செலுத்திப் பங் காற்றுகிறது என்றார் சிவானந்த்.
இந்து சமயத்தின்பால் இரு இளையர்களுக்கும் அதீத பற்றும் ஆர்வமும் உள்ள நிலையில், 2014ஆம் ஆண்டில் 'எஸ்ஜிஇந்து' இணையத்தளத்தைத் தொடங்கி வைத்தனர்.
இணையத்தளத்தில் இந்திய சமூகத்தினர் தொடர்பான விவகா ரங்கள் குறித்த வலைப்பதிவுகள் இடம்பெறுவதுடன் இந்து சமயம் சார்ந்த நிகழ்வுகளின் பட்டியலும் இருந்து வருகிறது. கிட்டத்தட்ட 2000 பேர் விரும்பிப் பார்வையிட்டு வரும் ஃபேஸ்புக் பக்கம் ஒன்றை யும் 'எஸ்ஜிஇந்து' இயக்கி வருகிறது.
இந்து சமயத்தைப் பற்றி குறிப் பிடும் மூலங்களிலிருந்தும் இலக் கிய உரைகளிலிருந்தும் எடுக்கப் பட்ட தகவல் துளிகள் இப்பக்கத் தில் பகிரப்பட்டு வருகின்றன.
சமயச் சார்பற்றவர்கள் என்று தங்களைக் கூறி வரும் 25க்கும் 34க்கும் இடைப்பட்ட வயதினர், 2010ஆம் ஆண்டுக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட கால கட்டத்தில் 19.9 விழுக்காட்டில் இருந்து 22.4 விழுக்காடாக உயர்ந் துள்ளனர்.
சமயச் சார்பில்லை என்று கூறி வரும் இளையர்களின் எண் ணிக்கை உயர்ந்திருந்தாலும் இந்து சமயத்தைப் பற்றி கூடுதல் தகவல்களை அளிப்பதால் சமயத் தின்பால் உள்ள ஆர்வத்தை அதி கரிக்க முடியும் என்று தமிழ் முரசு நாளிதழின் மின்னிலக்கச் செய்தி யாளர் ஜனார்த்தனன் கூறினார்.
தகவல்கள் அதிகம் இல்லாத நிலையில் ஈடுபாடு ஏற்படாது என் பது அவரின் கருத்து.
உதாரணத் திற்கு இந்துக் களின் நவராத்திரி விழாவுக்கும் தாவோயிச சமயத்தினர் கொண் டாடும் 'நைன் எம் பரர் காட்ஸ்' விழாவுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளைக் கூறும் ஒரு ஃபேஸ்புக் பகிர்வு இடம்பெற்றது. அத்துடன் சிங்கப்பூரிலும் வட்டார நாடுகளிலும் இந்து சமயம் தொடர் பான சர்ச்சைகளையும் 'எஸ்ஜி இந்து' இணையத் தளம் ஆராய்ந்து வருகிறது.
மலேசிய இந்து கோவில் அதி காரி ஊழல் தொடர்பில் விசாரிக் கப்பட்டது, தைப்பூசத் திருநாளை பொது விடுமுறையாக அனுசரிப் பது போன்ற பலதரப்பட்ட விவகா ரங்கள் குறித்தும் 'எஸ்ஜிஇந்து' கருத்துரைத்து வருகிறது.
உண்மைத் தகவல்கள் வழங் கப்படாத நிலையில் ஒரு நேர்மை யான கலந்துரையாடலை நடத்த முடியாது என்றார் சிவானந்த்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!