உட்லண்ட்ஸ் சமூக மன்றத்தின் இந்தியர் நற்பணிச் செயற்குழு ஏற்பாட்டில் கடந்த ஆறாம் தேதியன்று நடந்த தமிழ்மொழி விழாவில் 500க்கும் மேற்பட்ட உட்லண்ட்ஸ் வட்டாரவாசிகள் வருகை அளித்தனர். உள்துறை, சுகாதார அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளரான திரு அம்ரின் அமின் கலந்துகொண்ட இந்நிகழ்வில், தொடக்கப்பள்ளி மாணவர்களின் ஆடல், பாடல், இசைக்கருவிகளை வாசித்தல், ஒயிலாட்டம், கரகாட்டம், வில்லுப்பாட்டு போன்ற பாரம்பரிய கலைப் படைப்புகள் இடம்பெற்றன. படம்: உட்லண்ட்ஸ் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு
உட்லண்ட்சில் ஒய்யார கலைக் கொண்டாட்டம்
1 mins read
-

