எழுத்தாளர் சந்திப்பில் கவிஞர் இன்பா 

சிங்கப்பூர் எழுத்தாளர்களை அறி முகப்படுத்தும் 'சிங்கப்பூர் எழுத் தாளர் வரிசை'யில் (SG Author Series) இம்மாதம் 6ஆம் தேதி திருமதி இன்பாவுடனான கலந் துரையாடல் இடம்பெற்றது.
பல மேடைகளில் கவிதை படைத்திருக்கும் திருமதி இன்பா, அண்மையில் 'ஙப்போல் நிமிர்', 'ஞயம்பட சொல்', 'மழை வாசம்' என்ற மூன்று கவிதைத் தொகுப்பு களையும் 'மூங்கில் மனசு' என்கிற சிறுகதைத் தொகுப்பையும் வெளி யிட்டார்.
குடும்பம், அலுவலகப் பணி களுக்கிடையே கவிதை, சிறுகதை, கவியரங்கம், நிகழ்ச்சி நெறி ஆள்கை போன்ற பல இலக்கியப் பணிகளுக்கு எப்படி தன் நேரத்தை நிர்வகிக்கிறார் என்றும் பரந்துபட்ட வாசிப்பு தன் பயணத்திற்கு எவ் வாறு பயனளிக்கிறது என்பதையும் திருமதி இன்பா பார்வையாளர் களுடன் பகிர்ந்துகொண்டார்.
இலக்கிய விமர்சனத்தின் மூல மாகவே எழுத்தாளர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்றதோடு அந்த விமர்சனம் எந்த ஒரு எழுத்தாளரையும் முடக் கும் விதமாக இல்லாமல் ஆரோக் கியமானதாக இருந்தால் நல்லது என்பதையும் வலியுறுத்தினார்.
சிறுவயதில் தந்தை எப்படி திருக்குறளை மனனம் செய்ய வைத்தார், நான்கு நூல்கள் ஒரே நேரத்தில் வெளியிட தாம் எதிர் நோக்கிய சிரமங்கள் எனப் பல சுவாரசியமான கதைகளை அவர் பகிர்ந்துகொண்டார்.
திருமதி இன்பா சிங்கப்பூர் கவிமாலை அமைப்பின் செய லவை உறுப்பினராகப் பல்வேறு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து நடத்தி வருகிறார். அண்மையில் பொதிகை தமிழ்ச் சங்கம் நடத் திய உலகளாவிய கவிதை நூல் போட்டியில் இவருடைய கவிதை நூலுக்குப் பரிசு கிடைத்தது.
செய்தி: தமிழ்ச்செல்வி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!